கோபால்ட்டு முக்கார்பனைல் நைட்ரோசில்
கோபால்ட்டு முக்கார்பனைல் நைட்ரோசில் (Cobalt tricarbonyl nitrosyl) Co(CO)3NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம கோபால்ட் சேர்மமாகும். அடர் சிவப்பு நிறத்தில் எளிதில் ஆவியாகும் ஒரு எண்ணெயாக இது காணப்படுகிறது. முனைவற்ற கரைப்பான்களில் கோபால்ட் முக்கார்பனைல் நைட்ரோசில் கரைகிறது. மிக எளிய உலோக நைட்ரோசில்களுக்கான எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்றாகும். அதிக நச்சுத் தன்மை கொண்ட இச்சேர்மம் நிக்கல் டெட்ராகார்பனைலின் நச்சுத்தன்மையை நினைவூட்டுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கோபால்ட் நைட்ரோசில் முக்கார்பனைல்
| |
இனங்காட்டிகள் | |
14096-82-3 | |
ChemSpider | 21241479 |
EC number | 237-945-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 13539873 (மின்சுமை பிழை) |
| |
பண்புகள் | |
C3CoNO4 | |
வாய்ப்பாட்டு எடை | 172.97 g·mol−1 |
தோற்றம் | சிவப்பு எண்ணெய் |
அடர்த்தி | 1.47 கி/செ.மீ3 |
உருகுநிலை | −1.1 °C (30.0 °F; 272.0 K) |
கொதிநிலை | 50 °C (122 °F; 323 K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பும் வினைகளும்
தொகுஇருகோபால்ட்டு ஆக்டாகார்பனைலுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தினால் கோபால்ட் முக்கார்பனைல் நைட்ரோசில் உருவாகிறது.[1]
- Co2(CO)8 + 2 NO → 2 Co(CO)3NO + 2 CO
இதைத் தவிர வேறு பல தயாரிப்பு முறைகளும் கண்டறியப்பட்டுள்ளன. கோபால்ட் முக்கார்பனைல் நைட்ரோசில் சேர்மம் மூவிணைய பாசுபீன்கள் மற்றும் ஐசோசயனைடுகள் போன்ற இலூயிசு காரங்களுடன் பதிலீட்டு வினைக்கு உட்படுகிறது. உடன் நிகழ்வாக கார்பனோராக்சைடு இழக்கப்படுகிறது..[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ King, R. B. "Organometallic Synthesis, Volume 1: Transition-metal compounds" (1965) Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0124080502
- ↑ Hering, Florian; Berthel, Johannes H. J.; Lubitz, Katharina; Paul, Ursula S. D.; Schneider, Heidi; Härterich, Marcel; Radius, Udo (2016). "Synthesis and Thermal Properties of Novel NHC-Stabilized Cobalt Carbonyl Nitrosyl Complexes". Organometallics 35 (17): 2806–2821. doi:10.1021/acs.organomet.6b00374.