கோபால்பூர் துறைமுகம்
கோபால்பூர் துறைமுகம் (Gopalpur port) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் இருக்கும் கோபால்பூரில் அமைந்துள்ள ஓர் ஆழ்கடல் துறைமுகமாகும். துறைமுகம் வங்காள விரிகுடாவின் கடற்கரையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. கோபால்பூர் துறைமுகம் ஒடிசாவின் கடல் வர்த்தகத்தையும், தொழில் மற்றும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கிறது.[1] [2]
கோபால்பூர் துறைமுகம் Gopalpur port | |
---|---|
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
ஆள்கூற்றுகள் | 21°07′N 86°15′E / 21.12°N 86.25°E |
விவரங்கள் | |
நிர்வகிப்பாளர் | கோபால்பூர் துறைமுக நிறுவனம் |
உரிமையாளர் | சாப்பூர்சி பால்லோன்சி துறைமுகங்கள் நிறுவனம் மற்றும் ஒடிசா இசுடீவ்தோர்சு நிறுவனம். |
துறைமுகத்தின் வகை | இயற்கை துறைமுகம் |
நிறுத்தற் தளங்கள் | 3 |
ஆழம் | 18.5 மீட்டர்கள் (61 அடி) |
முதன்மை செயல் அலுவலர் | தளபதி சந்தீப் அகர்வால் |
புள்ளிவிவரங்கள் | |
வலைத்தளம் http://www.gopalpurports.in/ |
ஒடிசா அரசு 2019 ஆம் ஆண்டு சூன் மாதத்திற்குள் கோபால்பூர் துறைமுகத்திற்கான முதல் கட்ட கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டது.[3]
துறைமுகம்
தொகுகோபால்பூர் துறைமுகம் இயற்கையானதாகும். இதன் ஆழம் 18.5 மீட்டர். 100,000 நிலைச் சுமை டன்களுக்கும் அதிகமான சரக்குப் பொருள்களை துறைமுகம் கையாள முடியும். இந்த துறைமுகத்தில் 3 கப்பல் நிறுத்துமிடங்கள் உள்ளன.
போக்குவரத்து
தொகுகொல்கத்தா-சென்னை ரயில் பாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் கோபால்பூர் துறைமுகம் இணைக்கப்பட்டுள்ளது. 6 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 217 ஆல் இத்துறைமுகம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலை எண் 5 ஆல் அடையாளப்படுத்தப்படும் கொல்கத்தா-சென்னை பாதைக்கும் மாநில நெடுஞ்சாலை எண்கள் 7 மற்றும் 17 ஆகிய சாலைகளுக்கும் அருகில் அமைந்துள்ளது. இதனால் கோபால்பூருடன் நல்ல போக்குவரத்து இணைப்புகள் கிடைக்கின்றன. கோபால்பூர் துறைமுகம் பரதீப் துறைமுகத்திலிருந்து 160 கிமீ தொலைவிலும் விசாகப்பட்டினத்திலிருந்து 260 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shapoorji Pallonji set to acquire 51% in Gopalpur port". The Economic Times. 22 November 2016. https://economictimes.indiatimes.com/industry/transportation/shipping-/-transport/shapoorji-pallonji-set-to-acquire-51-in-gopalpur-port/articleshow/55556634.cms.
- ↑ "Odisha govt is set to sign fresh concession pact for Gopalpur Ports Ltd". www.business-standard.com. 7 March 2018. https://www.business-standard.com/article/economy-policy/odisha-govt-is-set-to-sign-fresh-concession-pact-for-gopalpur-ports-ltd-118030700429_1.html.
- ↑ "Odisha sets June’19 target to complete Gopalpur Port’s first phase". odishatv.in. 3 March 2018 இம் மூலத்தில் இருந்து 3 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180803133936/http://odishatv.in/odisha/body-slider/odisha-sets-june19-target-to-complete-gopalpur-ports-first-phase-279621.