கோபிநாத் முத்துக்காடு

கோபிநாத் முத்துக்காடு (Gopinath Muthukad) (பிறப்பு: ஏப்ரல் 10, 1964) தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய மாய வித்தைக் கலைஞரும், ஊக்கமளிக்கும் பேச்சாளரும் ஆவார் . இவர் தனது செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு ஊடகமாக மாய வித்தையை பயன்படுத்துகிறார். திருவனந்தபுரத்தில் உலகின் முதல் மாய வித்தை கழகத்தை நிறுவினார். மாயக்கலை வல்லுனரான ஆரி கௌதினி என்பவர் 1904 ஆம் ஆண்டில் நிகழ்த்திய தப்பிக்கும் மாயக் கலை செயலை 1995ஆம் ஆண்டில் இவரும் செய்து உலகின் முதல் மாயக்கலை நிபுணராவார். [2] அதே ஆண்டில் இவருக்கு கேரள சங்கீ நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது. சர்வதேச மாய வித்தைச் சங்கத்தால் நிறுவப்பட்ட சர்வதேச மெர்லின் விருதை வென்றுள்ளார். [3] கேரளாவில் குழந்தை உரிமை நடவடிக்கைகளை ஊக்குவித்ததற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பிரபல ஆதரவாளராக கௌரவிக்கப்பட்ட முதல் கேரளவாதியாவார்.

கோபிநாத் முத்துக்காடு
பிறப்பு10 ஏப்ரல் 1964 (1964-04-10) (அகவை 60)[1]
நிலம்பூர், மலப்புறம் மாவட்டம், கேரளம், இந்தியா
தேசியம் இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்என். எஸ். எஸ். கல்ல்லூரி, மஞ்சேரி
பணி
பெற்றோர்
  • குஞ்ஞுன்னி நாயர்
  • தேவகி அம்மா
வாழ்க்கைத்
துணை
கவிதா முத்துக்காடு
பிள்ளைகள்விம்சி முத்துக்காடு
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் உடன் முத்துக்காடு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் முத்துக்காடு, 2012
ஒரு மாய நிகழ்ச்சிக்குப் பிறகு சிக்கிம், கேங்டாக்கின் மேலே 14400 அடி உயரத்தில் உள்ள நாதூ லா கணவாயில் சீன வீரர்களை வாழ்த்துகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Gopinath Muthukad Official Site". பார்க்கப்பட்ட நாள் 20 August 2016.
  2. "Indian magician performs Houdini-like escape". Rediff.com. 14 February 1997. பார்க்கப்பட்ட நாள் 3 May 2017.
  3. "2011 Yearbook". International Magicians Society. Archived from the original on 20 August 2016. பார்க்கப்பட்ட நாள் August 20, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிநாத்_முத்துக்காடு&oldid=3794906" இலிருந்து மீள்விக்கப்பட்டது