கோபிலி ஆறு (Kopili River) என்பது வடகிழக்கு இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான ஓடும் ஓர் ஆறாகும். இது மேகாலயா மற்றும் அசாம் மாநிலங்கள் வழியாகப் பாய்கிறது. கோபிலி ஆறு அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றின் தெற்குக் கரை துணை ஆறாகும்.[1]

கோபிலி ஆறு
நாகோனில் கோபிலி ஆறு
கோபிலி ஆறு is located in அசாம்
கோபிலி ஆறு
அசாமில் அமைவிடம்
கோபிலி ஆறு is located in இந்தியா
கோபிலி ஆறு
கோபிலி ஆறு (இந்தியா)
அமைவு
நாடுஇந்தியா
அமைவிடம்அசாம், மேகாலயா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுகர்பி மேகாலயா பீடபூமி
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
பிரம்மபுத்திரா
நீளம்290 km (180 mi)

ஆற்றோட்டம்

தொகு

கோபிலி மேகாலயா பீடபூமியில் உருவாகி மத்திய அசாம் மற்றும் அசாமின் மலை மாவட்டங்கள் வழியாக பிரம்மபுத்திராவுடன் சங்கமிக்கும் முன் பாய்கிறது. அசாமில் இது கர்பி ஆங்கலாங், திமா ஹசாவ், காமரூப் மற்றும் நகாமோ மாவட்டங்கள் வழியாகப் பாய்கிறது.[2] இந்த ஆறு மொத்தம் 290 கிலோமீட்டர் (180 மைல்) நீளம் ஓடுகிறது. இது 16,420 சதுர கிலோமீட்டர் (6,340 சதுர மைல்) நீர்ப்பிடிப்புப் பகுதியினைக் கொண்டுள்ளது. நாகான் மாவட்டத்தில் சமவெளிகளில் இறங்குவதற்கு முன்பு 120 கிலோமீட்டர் (75 மைல்) தொலைவில் பல ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் அருவிகளைக் கொண்டுள்ளது.[1][3]

நீர்ப்பாசன பணிகள்

தொகு

1975ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட, காமரூப் மாவட்டத்தில் கோபிலி பாசனத் திட்டம் 14 வருவாய் கிராமங்களில் 1,300 ஹெக்டேர் (3,200 ஏக்கர்) நிலத்திற்கு நீர்ப்பாசனம் வழங்குகிறது. இதன் மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.[4] அசாமின் திமா ஹசாவ் மற்றும் மேகாலயாவின் ஜைண்டியா மலை மாவட்டங்களில் அமைந்துள்ள கோபிலி நீர்மின் திட்டம், வடகிழக்கு மின்சாரக் கழகத்தால் நடத்தப்படுகிறது. இதில் காண்டோங் மற்றும் உம்ரோங்சோ அணைகள் மற்றும் அவற்றின் நீர்த்தேக்கங்கள் அடங்கும். இந்த நீர்மின் திட்டத்தில் மொத்தம் 275 மெகாவாட் திறன் கொண்ட மூன்று மின் நிலையங்கள் உள்ளன.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள்

தொகு

கோபிலி 54 வகையான மீன்களைக் கொண்டுள்ளது.[2] மேகாலயாவில் கோபிலியின் மேல் பகுதிகளில் உள்ள திறந்தவெளி நிலக்கரி சுரங்கமானது ஆற்றின் அமில மயமாக்கலுக்கு வழிவகுத்தது. இது ஆற்றின் போக்கின் ஒரு பகுதியை உயிரியல் ரீதியாக பாதித்தது. இதனால் ஆற்று நீர் மனித நுகர்வுக்குத் தகுதியற்றதாக உள்ளது. கோபிலி நீர்மின் திட்டத்தின் மின் நிலையங்களில் அடிக்கடி செயலிழக்கவும் வழிவகுத்தது. அசாமில் உள்ள நீப்கோ (வடகிழக்கு மின்சார மின் கழகம் லிமிடெட்) நிறுவனத்தின் 275 மெகாவாட் கோபிலி அணை மின் நிலையம் 7 அக்டோபர் 2019 அன்று பெரும் பேரழிவைச் சந்தித்தது. உம்ராங்சோ அணையிலிருந்து நீர்மின் நிலையத்திற்குத் தண்ணீரை எடுத்துச் செல்லும் குழாய் அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் அதிகாலையில் வெடித்தது. இதனால் ஏராளமான நீர் மின் நிலையத்திற்குள் நுழைந்தது.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mahanta, Kashyap (November–December 2012). "Structural Formation & Seismicity of Kopili Fault Region in North- East India and Estimation of Its Crustal Velocity". International Journal of Modern Engineering Research 2 (6): 4699–4700. 
  2. 2.0 2.1 Das, Bubul (May 2012). "A Comparison of Fish Diversity of Kopili and Jamuna Rivers of Karbi Anglong District, Assam". The Science Probe. 1 1: 22–23. http://thesciprobe.com/files/documents/5.-A-Comparison-of-Fish-Diversity-of-Kopili-and-Jamuna-Rivers%E2%80%A6.pdf. பார்த்த நாள்: 18 September 2013. 
  3. "Jaintia Hills". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 18 September 2013.
  4. "GUWAHATI WEST DIVISION (IRRIGATION), ULUBARI, GUWAHATI-8". பார்க்கப்பட்ட நாள் 18 September 2013.
  5. "NEEPCO blames Meghalaya's illegal coal mining for Kopili hydel plant accident". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-10-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
  6. Sandrp (2019-10-08). "Major disaster at Kopili Dam of NEEPCO in Assam". SANDRP (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிலி_ஆறு&oldid=4143101" இலிருந்து மீள்விக்கப்பட்டது