கோப்புப் பரிமாற்ற நெறிமுறை
கோப்புப் பரிமாற்ற நெறிமுறை (FTP ) என்பது டிசிபி/ஐபி அடிப்படையிலான வலையமைப்பில் கோப்புகளைத் திறமையாக கையாளவும், பரிமாற்றம் செய்யவும் பயன்படுத்தப்படும் தரமுறைப்படுத்தப்பட்ட வலையமைப்பு நெறிமுறையாகும். கிளையன் வழங்கன் (Client Server) வடிவமைப்பின் மீது கட்டப்பட்டிருக்கும் FTP, கிளையன் மற்றும் வழங்கன் பயன்பாடுகளுக்கு இடையே பிரத்யேக கட்டுப்பாடுகளையும், தரவு இணைப்புகளையும் பயன்படுத்துகிறது.
பயன்பாடுகள் தரமுறைப்படுத்தப்பட்ட கட்டளை தொடரமைப்புடன் (standard command syntax) கூடிய ஓர் எளிய கட்டளை-வரிக் கருவிகளாக இருக்கும். ஆனால் தற்போது அனைத்து இயங்குதளங்களுக்கும் ஏற்றவாறு எளிய பயனர் இடைமுகங்களும் (graphical user interfaces) அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
பெரும்பாலும் எஃப்டிபி ஒரு பயன்பாட்டு உட்கூறாகவே பயன்படுத்தப்படுகி்றது. பதிவு செய்யப்பட்ட ஒரு பயனராகவோ அல்லது பதிவுசெய்யப்படாத ஒரு பயனராகவோ இருந்து கோப்பு பரிமாற்ற நெறிமுறையைப் பயன்படுத்த முடியும். சாரமற்ற கோப்பு பரிமாற்ற நெறிமுறையும் (Trival File Transfer Protocol-TFTP) இதைப் போன்றதே. ஆனால் எளிமையாக்கப்பட்ட இது, பரவலாக செயல்படுத்தக்கூடியது அல்ல. மேலும் இது கோப்பு பரிமாற்ற நெறிமுறையின் அதிகாரபூர்வமற்ற பதிப்பாகவும் இருக்கிறது.
வரலாறு
தொகு1971 ஏப்ரல் 16-ல், RFC-114 வெளியிடப்பட்டது. அதுவே கோப்பு பரிமாற்ற நெறிமுறையின் மூல தொழில்நுட்ப வரையறையாக இருந்தது. அதன்பின் 1980-ஆம் ஆண்டு ஜூன் மாதம், அது RFC 765 வரையறையால் நீக்கப்பட்டது. அதுவும் பின்னர் அதன் வரிசையில், RFC 959 வரையறையால் 1985-ஆம் ஆண்டு அக்டோபரில் வழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. இதுவே தற்போது நடப்பில் உள்ள பதிப்பாகும்.
பயன்
தொகுRFC-ஆல் கோடிட்டு காட்டப்படுவது போல, கோப்பு பரிமாற்ற நெறிமுறை கீழ்காண்பனவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றன:
- கோப்புகளின் பகிர்வை அதிகரிக்க (கணினி நிரல்களையும் மற்றும்/அல்லது தரவுகளையும் மட்டும் பகிர்ந்து கொள்வதற்கு) உதவுகிறது.
- தொலைதூர கணினிகளை (Remote computers) மறைமுகமாகவோ அல்லது தடையின்றி பயன்படுத்தவோ உதவுகிறது.
- வெவ்வேறு புரவன்களுக்கு இடையே கோப்பு சேமிப்பு அமைப்புமுறைகளில் (file storage systems) இருக்கும் மாற்றங்களில் இருந்து பயனரைப் பாதுகாத்தல்
- துல்லியமாகவும், நம்பிக்கைகுரிய முறையிலும் தரவுகளை (data) பரிமாற உதவுகிறது.
FTP-யை ஆக்டிவ் பயன்முறை, பேசிவ் பயன்முறை மற்றும் விரிவாக்கப்பட்ட பேசிவ் பயன்முறை ஆகிய நிலையில் இருந்து இயக்கலாம். விரிவாக்கப்பட்ட பேசிவ் பயன்முறை என்பது செப்டம்பர் 1998-ல் RFC 2428-ல் சேர்க்கப்பட்டது.
வலையமைப்பில் தகவல்களைப் பரிமாறும் போது, பல்வேறு தரவு குறியீடுகளைப் பயன்படுத்த முடியும். பொதுவாக பயன்படுத்தப்படும் முக்கியமான இரண்டு பரிமாற்ற வழிகளாவன:
- ஆஸ்கி (ASCII) பயன்முறை: வெறும் சொற்களுக்கு மட்டும். (வேறெந்த தரவு வடிவமும் இதில் சரியாக வராது)
- பைனரி பயன்முறை: அனுப்பும் இயந்திரம் ஒவ்வொரு கோப்பையும் ஒன்றன்பின் ஒன்றாக பைட்டுகளாக (byte) அனுப்பும். பெறும் இயந்திரம், அதை எவ்வாறு பெறுகிறதோ அவ்வாறே ஒன்றன்பின் ஒன்றாக பைட்டுகளைச் சேமிக்கிறது. (இந்த கோப்பு பரிமாற்ற நெறிமுறையின் தரமுறை "IMAGE" அல்லது 'I' பயன்முறை என்றும் அழைக்கப்படுகிறது.)
FTP வழங்கனிலிருந்து வெளிவரும் குறியீடுகள், அவற்றிற்குள் கொண்டிருக்கும் இலக்கங்களின் மூலமாக அவை எந்த நிலையில் இருக்கின்றன என்று எடுத்துக்காட்டுகின்றன.
பாதுகாப்பு
தொகுதரவு பரிமாற்றத்தின் போது குறியேற்றம் செய்வதற்கான எந்த குறிப்பிட்ட முறையும் இல்லாததால், நிஜமான FTP தொழில்நுட்ப வரையறை இயல்பாகவே கோப்புகள் பரிமாற்றத்திற்கான பாதுகாப்பற்ற முறையாகவே அமைந்துவிடுகின்றன. அதாவது, பெரும்பாலான வலையமைப்புகளில் அவற்றிலிருக்கும் பயனர் பெயர்களையும், கடவுசொற்களை யும், எஃப்டிபி கட்டளைகளையும் மற்றும் பரிமாறப்பட்ட கோப்புகளையும் ஒரு பேக்கெட் ஸ்னெஃபர் (packet sniffer) பயன்படுத்தி அதே வலையமைப்பில் யாராலும் கைப்பற்றி கொள்ள முடியும் என்பதையே இது குறிக்கிறது.
அநாமதேயர் எஃப்டிபி
தொகுFTP சேவையை அளிக்கும் ஒரு புரவன், அநாமதேயர் எஃப்டிபி (Anonymous FTP) அணுகுதலையும் அளிக்க கூடும். பயனர் பெயர் எதுவுமின்றி, ஓர் 'அநாமதேயர்' கணக்குடன், பயனர்கள் இந்த சேவைக்குள் உள்நுழையலாம். ஆயினும் பயனர்கள் அவர்களுடைய கடவுச்சொற்களுக்குப் பதிலாக மின்னஞ்சல் முகவரியை அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுவார்கள். உண்மையில் இம்மாதிரியான உள்நுழைவில் அளிக்கப்படும் தரவின் மீது எவ்வித ஆய்வும் செய்யப்படுவதில்லை.
நவீன கோப்பு பரிமாற்ற நெறிமுறையைக் கையாளும் கிளையன்கள், பயனர்களின் அநாமதேயர் உள்நுழைவு செயல்பாட்டை மறைத்து விடுவதும் உண்டு. இதில் எஃப்டிபி கிளையன் கடவுச்சொல்லாக வெற்று தரவை அனுப்பி வைத்துவிடும்.
எஃப்டிபி மற்றும் இணைய உலாவிகள்
தொகுஎஃப்பிடிஎஸ் (FPTS) போன்ற நெறிமுறை விரிவாக்கங்களுடன் ஒத்துழைப்பைக் கொண்டிருக்காத போதும், பெரும்பாலான சமீபத்திய இணைய உலாவிகளும், கோப்பு மேலாண்மை பயன்பாடுகளும் எஃப்டிபி வழங்கன்களுடன் இணைப்பைப் பெறும் வகையில் இருக்கின்றன. இது எஃப்டிபி வழியாக தொலைதூர கோப்புகளைக் கையாள அனுமதிக்கிறது.
இது FTP வலைத்தளம் வழியாக செய்யப்படுகிறது. அது ftp(s)://<FTP வழங்கன் முகவரி > (எடுத்துக்காட்டாக, ftp://ftp.gimp.org/ பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்) என்ற வடிவத்தில் இருக்கும். அந்த வலைத்தளத்தில், விருப்பப்பட்டால் உள்நுழையும் வசதி அளிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: ftp(s)://<உள்நுழை >:<கடவுச்சொல் >@<FTP வழங்கன் முகவரி >:<போர்ட் > என்றிருக்கும்.
பெரும்பாலான இணைய-உலாவிகள் பேசிவ் பயன்முறை கோப்பு பரிமாற்ற நெறிமுறையையே பயன்படுத்துகின்றன. இந்த பேசிவ் பயன்முறை கோப்பு பரிமாற்ற நெறிமுறை எல்லா எஃப்டிபி வழங்கன்களாலும் கையாள முடியாது. சில உலாவிகள் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய மட்டுமே அனுமதிக்கின்றன. அதேசமயத்தில் வழங்கனில் கோப்புகளை பதிவேற்றம் செய்ய அனுமதிப்பதில்லை.
கூடுதல் வாசிப்புக்கு
தொகு- RFC 959 – (தரமுறைப்படுத்தப்பட்ட) கோப்பு பரிமாற்ற நெறிமுறை (FTP). ஜெ. போஸ்டல், ஜெ. ரெனால்ட்ஸ். அக்டோபர்-1985.
- RFC 1579 – (தகவல்ரீதியான) தீஞ்சுவர் பயன்பாடு கொண்ட FTP.
- RFC 2228 – (முன்வைக்கப்பட்ட தரமுறைப்பாடு) FTP பாதுகாப்பு விரிவாக்கங்கள்.
- RFC 2428 – (முன்வைக்கப்பட்ட தரமுறைப்பாடு) IPv6, NAT மற்றும் விரிவாக்கப்பட்ட passive பயன்முறையின் விரிவாக்கங்கள். செப்-1998.
- RFC 2640 – (முன்வைக்கப்பட்ட தரமுறைப்பாடு) கோப்பு பரிமாற்ற நெறிமுறையின் சர்வதேசமயமாக்கல்.
- RFC 3659 – (முன்வைக்கப்பட்ட தரமுறைப்பாடு) FTP-க்கான விரிவாக்கங்கள். பி. ஹேத்மன். மார்ச்-2007.
பிற வலைத்தளங்கள்
தொகு- Raw FTP கட்டளை பட்டியல்
- FTP சீகுவன்ஸ் வரைபடம் பரணிடப்பட்டது 2010-02-06 at the வந்தவழி இயந்திரம் (PDF வடிவத்தில்)
- சர்வர்கள்
- VsFTPd (Unix)
- ProFTPd (Unix)
- Pure-FTPd (Unix)
- FileZilla Server (Windows)
- FTP Server Test (Online)