கோப்ரூகி ஆறு

துருக்கியில் உள்ள ஒரு ஆறு

கோப்ரூகி பண்டைய காலத்தில் யூரிமெடோன் (Köprüçay, பண்டைய பெயர் Eurymedon ( பண்டைய கிரேக்கம் : Εὐρυμέδων) [1] என்பது துருக்கியின் அந்தால்யா மாகாணத்தில் பாயும் ஒரு ஆறாகும். இது மத்தியதரைக் கடலில் கலக்கிறது.

செல்ஜிக்கு அருகிலுள்ள யூரிமெடன் பள்ளத்தாக்கு, அதன் குறுக்கே உள்ள உரோமானியர் கால பாலம்

இதன் முகத்துவாரத்தில், கிமு 460 களில் (உண்மையான காலம் மிகவும் சர்ச்சைக்குரியது), ஏதெனியன் தளபதி சிமோன் பெரிய பாரசீக கப்பல்கள் மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்த படைகளைத் தோற்கடித்தார் ( யூரிமெடோன் போர் ). தரை மற்றும் கடல் போர்களான இந்த இரண்டு போர்கள் ஒரு நாள் நீடித்தது. போரின் முடிவில் 200 கப்பல்களைக் கொண்ட போனீசியன் கடற்படை முழுவதையும் சிமோன் கைப்பற்றியோ அல்லது அழித்தோ வெற்றிகொண்ட நிகழ்ச்சி நிகழ்ந்தது.

கிமு 190 இல், லூசியஸ் எமிலியஸ் ரெஜில்லஸ் தலைமையிலான உரோமானியக் கடற்படை, ஹன்னிபால் தலைமையிலான மூன்றாம் ஆண்டியோகசின் செலூசிட் கடற்படையை ஆற்றின் அருகே தோற்கடித்தது.

இசுட்ராபோ, கேப்ரியாஸ் என்று அழைக்கப்படும் ஏரி இதன் முகத்துவாரத்துக்கு அருகில் உள்ளளதாக பதிவு செய்துள்ளார். இருப்பினும் அந்த பகுதி இன்று உவர்ச் சதுப்பு நிலமாக உள்ளது. உரோமானிய அடித்தளத்தின் மீது அமைந்துள்ள செல்ஜுக் கால யூரிமெடன் பாலம், ஆஸ்பெண்டோசில் ஆற்றைக் கடக்க கட்டப்பட்டது. மேலும் அப்ஸ்ட்ரீம், பழங்கால செல்ஜ் செல்லும் பாதையில் பாதி வழியில், மற்றொரு ரோமானியப் பாலம் யூரிமெடன் பள்ளத்தாக்கைக் கடந்து செல்ல கட்டப்பட்டது.

குறிப்புகள்

தொகு
  1. Sempozyumu, Eğirdir (2001). Sosyal, kültürel ve ekonomik yönleri ile Eğirdir. Eğirdir Belediyesi. p. 480.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்ரூகி_ஆறு&oldid=3399694" இலிருந்து மீள்விக்கப்பட்டது