கோமட்சுனா
கோமட்சுனா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | |
பலவகை: | B. rapa var. perviridis
|
முச்சொற் பெயரீடு | |
Brassica rapa var. perviridis |
கோமட்சுனா (தாவரவியல் பெயர்: Brassica rapa var. perviridis, Komatsuna (小松菜), ஆங்கில மொழி: Japanese mustard spinach) என்பது இலைக் காய்கறியாகும். இது பிராசிகா இராபாவின் தாவரப் பல்வகைமைகளில் ஒன்றாகும். இக்காய்கறி யப்பான், தைவான் ஆகிய நாடுகளில் விற்பனைக்காக அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதனை பலவிதமான உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். சில ஆசிய நாடுகளில் இது தீவனப் பயிராகவும் பயன்படுத்தப் படுகிறது. நன்கு வளர்ந்த இத்தாவரம் அடர் பச்சையாகவும், அதன் தண்டுகள் இளம்பச்சையாகவும் இருக்கும். இதன் தண்டு ஏறத்தாழ 30 செ. மீ. நீளமாகவும், 18 செ. மீ. அகலமாகவும் இருக்கும்.[1] இதன் வளர்நிலை காலங்கள் இளவேனிற்காலம், இலையுதிர்காலம் ஆகும். தற்போது இதனை பசுமைக் குடில்களில் வருடம் முழுவதும் பயிர் செய்கின்றனர். இக்கீரையில் கல்சியம், உயிர்ச்சத்து ஏ, உயிர்ச்சத்து சி அதிகம் உள்ளது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://tropical.theferns.info/viewtropical.php?id=Brassica+rapa+perviridis
- ↑ Queensland Government, Department of Primary Industries and Fisheries. "Komatsuna: Commercial Production". Archived from the original on 23 August 2009. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்பிரல் 2024.
- ↑ https://www.ncbi.nlm.nih.gov/Taxonomy/Browser/wwwtax.cgi?lvl=0&id=344680