கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு தொடருந்து நிலையம்


கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையம் என்பது, இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில்,[1] 11°01′12.7″N 76°57′16.6″E / 11.020194°N 76.954611°E / 11.020194; 76.954611 (அதாவது, 11.020200°N 76.954600°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 453 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து, இந்நிலையம் சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. தினமும் சுமார் 144 எண்ணிக்கையிலான தொடருந்துகள், இந்நிலையத்தைக் கடந்து செல்கின்றன.[2] 2022 ஆம் ஆண்டு சூன் மாதம், இந்தியாவின் முதலாவது பாரத் கௌரவ் தொடருந்து, கோயம்புத்தூரிலிருந்து சீரடி நோக்கி பயணம் புறப்பட்டது இந்நிலையத்திலிருந்து தான்.[3] ரூ.3.62 கோடி செலவில், கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையத்தில், இரயில்வே நடைமேம்பாலம் நீட்டிப்பு பணிகளுக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.[4]

கோயம்புத்தூர் வடக்கு
பொது தகவல்கள்
அமைவிடம்சிவானந்தா காலனி, டாடாபாத், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°01′12.7″N 76°57′16.6″E / 11.020194°N 76.954611°E / 11.020194; 76.954611
ஏற்றம்453 மீட்டர்கள் (1,486 அடி)
தடங்கள்சென்னை-கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் கிளை
நடைமேடை2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைசெந்தரத் தரை
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டிலுள்ளது
நிலையக் குறியீடுCBF
மண்டலம்(கள்) தெற்கு இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
வரலாறு
மின்சாரமயம்ஆம்

மேற்கோள்கள்

தொகு
  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. Aishwaryaa, R. (2022-09-14). "Expansion of railway stations in Coimbatore on the cards". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.
  3. Charan, N. Sai (2022-06-14). "First 'Bharat Gaurav' train service starts from Coimbatore". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.
  4. The Hindu Bureau (2022-12-16). "Railways approves extension of FOB at Coimbatore North Junction". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.

வெளி இணைப்புகள்

தொகு



வார்ப்புரு:TamilNadu-railstation-stub