சிவானந்தா காலனி

கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சிவானந்தா காலனி (Sivananda Colony) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

சிவானந்தா காலனி
Sivananda Colony
சிவானந்தா காலனி Sivananda Colony is located in தமிழ் நாடு
சிவானந்தா காலனி Sivananda Colony
சிவானந்தா காலனி
Sivananda Colony
சிவானந்தா காலனி, கோவை, (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°01′21″N 76°57′23″E / 11.022500°N 76.956500°E / 11.022500; 76.956500
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்
ஏற்றம்
453 m (1,486 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
641012
தொலைபேசி குறியீடு+91422xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்கோயம்புத்தூர், காந்திபுரம், டாடாபாத், ஆர். எஸ். புரம், கவுண்டம்பாளையம், கணபதி, ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், பீளமேடு, சாய்பாபா காலனி
மாநகராட்சிகோயம்புத்தூர் மாநகராட்சி
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்பி. ஆர். நடராஜன்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்வானதி சீனிவாசன்
இணையதளம்https://coimbatore.nic.in

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 453 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிவானந்தா காலனி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 11°01'21.0"N 76°57'23.4"E (அதாவது, 11.022500°N 76.956500°E) ஆகும்.

அருகிலுள்ள ஊர்கள்

தொகு

கோயம்புத்தூர், காந்திபுரம், டாடாபாத், ஆர். எஸ். புரம், கவுண்டம்பாளையம், கணபதி, ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், பீளமேடு, சாய்பாபா காலனி ஆகியவை சிவானந்தா காலனிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.

போக்குவரத்து

தொகு

சாலைப் போக்குவரத்து

தொகு

கோயம்புத்தூரில் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை சிவானந்தா காலனி வழியாகச் செல்கின்றன.

தொடருந்து போக்குவரத்து

தொகு

சிவானந்தா காலனியிலுள்ள கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையம் தரம் உயர்த்தப்பட்டு கோவையின் இரண்டாவது சந்திப்பு தொடருந்து நிலையமாகத் திகழ வேண்டுமென, தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரால், மத்திய இரயில்வே துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.[2] 24 மணி நேரமும் சுறுசுறுப்பாகக் காணப்படும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம், சிவானந்தா காலனியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்திலுள்ளது.

வான்வழிப் போக்குவரத்து

தொகு

இங்கிருந்து 11 கி.மீ. தொலைவிலுள்ள கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், தொழிலதிபர்கள் அதிகம் வந்து செல்லுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

கல்வி

தொகு

பள்ளி

தொகு

இங்குள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மாணவர்களின் கல்வி மற்றும் செயல்திறன் ஊக்கத்திற்கு பேருதவியாக இருக்கிறது.

ஆன்மீகம்

தொகு

கோயில்

தொகு

இங்குள்ள கற்பக விநாயகர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[3]

அரசியல்

தொகு

சிவானந்தா காலனியானது, கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது. மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி. ஆர். நடராஜன் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Tin̲amaṇi vairavil̲ā āṇṭu malar, 1934-1994. Intiyan̲ Ekspiras. 1994.
  2. "கோவை ரயில்வே கோட்டம்: வானதியின் புதிய கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு…". www.patrikai.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-03-11. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
  3. "Arulmigu Karpaga Vinayakar Temple, Sivananda Colony, Coimbatore - 641012, Coimbatore District [TM011458].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவானந்தா_காலனி&oldid=3631743" இலிருந்து மீள்விக்கப்பட்டது