சாய்பாபா காலனி

கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சாய்பாபா காலனி (Sai Baba colony) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். 1939 ஆம் ஆண்டில் இப்பகுதியில் சாய்பாபா கோயில் ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. தென்னிந்தியாவின் முதல் சாய்பாபா கோயிலான இக்கோயில் (தென்னிந்தியாவின் சீரடி என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது) அமைந்துள்ளதின் காரணமாக இப்பகுதி, சாய்பாபா காலனி என்ற பெயரைப் பெற்றது.[1] சாய்பாபா காலனியில் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இயங்கும் நகரியல் பயிற்சி மைய வளாகம் ஒன்று உள்ளது.[2]

சாய்பாபா காலனி
Sai Baba colony
சாய்பாபா காலனி Sai Baba colony is located in தமிழ் நாடு
சாய்பாபா காலனி Sai Baba colony
சாய்பாபா காலனி
Sai Baba colony
சாய்பாபா காலனி, கோவை, (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°01′26″N 76°56′43″E / 11.023800°N 76.945200°E / 11.023800; 76.945200
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்
ஏற்றம்
462 m (1,516 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
641011
தொலைபேசி குறியீடு+91422xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்கோயம்புத்தூர், காந்திபுரம், டாடாபாத், ஆர். எஸ். புரம், கவுண்டம்பாளையம், கணபதி, ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், பீளமேடு
மாநகராட்சிகோயம்புத்தூர் மாநகராட்சி
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்பி. ஆர். நடராஜன்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்அம்மன் கே. அர்ஜுனன்
இணையதளம்https://coimbatore.nic.in

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 462 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சாய்பாபா காலனியின் புவியியல் ஆள்கூறுகள் 11°01'25.7"N 76°56'42.7"E (அதாவது, 11.023800°N 76.945200°E) ஆகும்.

அருகிலுள்ள ஊர்கள்

தொகு

கோயம்புத்தூர், காந்திபுரம், டாடாபாத், ஆர். எஸ். புரம், கவுண்டம்பாளையம், கணபதி, ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், பீளமேடு ஆகியவை சாய்பாபா காலனிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.

போக்குவரத்து

தொகு

சாலைப் போக்குவரத்து

தொகு

சாய்பாபா காலனியில் பேருந்து நிலையம் ஒன்று உள்ளது.[3] ரூ.50 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில், சாய்பாபா காலனி சந்திப்பில் சுமார் 1.14 கி.மீ. நீளத்தில் மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[4]

தொடருந்து போக்குவரத்து

தொகு

சாய்பாபா காலனியிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் இருக்கும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ஒரு தொடருந்து நிலையம்.

வான்வழிப் போக்குவரத்து

தொகு

இங்கிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.

கல்வி

தொகு

பள்ளிகள்

தொகு

வி. வி. வாணி வித்யாலயா (மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி), அங்கப்பா சீனியர் மேல்நிலை சி. பி. எஸ். இ. பள்ளி, லிசியுக்ஸ் (Lisieux) மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகியவை சாய்பாபா காலனியிலுள்ள முக்கிய பள்ளிகளாகும்.

பொழுதுபோக்கு

தொகு

பூங்கா

தொகு

பொழுதுபோக்கிற்காக மக்கள் இங்குள்ள பாரதி பூங்கா வந்து செல்லுகின்றனர்.

அரசியல்

தொகு

சாய்பாபா காலனியானது, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். மக்களவைத் தொகுதி உறுப்பினராக பி.ஆர். நடராஜன், 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும், இப்பகுதி, கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி) சார்ந்தது. சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக அம்மன் கே. அர்ஜூனன், 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தென்னிந்தியாவின் சீரடி.. கோவை சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜைகள்". News18 Tamil. 2022-06-15. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
  2. "ரோட்டோரம் மாநகராட்சி மரங்களை...வெட்டி முறிக்கிறாங்க! வருவாய்த்துறையோ ரொம்ப சுறுசுறுப்பு - Dinamalar Tamil News" (in ta). 2022-11-23. https://m.dinamalar.com/detail.php?id=3177311. 
  3. பாசு. நம்ம ஊரு கோவை – கட்டுரைகள். Free Tamil Ebooks.
  4. மாலை மலர் (2022-11-06). "சிங்காநல்லூர்-சாய்பாபா காலனி- காளப்பட்டி 3 புதிய மேம்பாலங்கள்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்பாபா_காலனி&oldid=3631749" இலிருந்து மீள்விக்கப்பட்டது