ஆர். எஸ். புரம்
ஆர். எஸ். புரம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] சற்று வசதியானவர்கள் வாழும் குடியிருப்புகள் மற்றும் அதிக வணிக நிறுவனங்கள் நெருக்கமாகவும் கொண்ட பகுதி இது.[2] உழவர் சந்தை ஒன்று இங்கு செயல்படுகிறது.[3] ஆர். எஸ். புரத்தில் மாநகராட்சி நீச்சல் குளம் ஒன்று உள்ளது. தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் நீச்சல் பயிற்சி பெறுபவர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.[4] மாநகராட்சிக்குச் சொந்தமான கலையரங்கம் ஒன்றும் ஆர். எஸ். புரத்தில் உள்ளது.[5] இக்கலையரங்கில், 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தியதி, தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தலைமையில், மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் முன்னிலையில், சாலை பாதுகாப்புக் குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.[6]
ஆர். எஸ். புரம்
இரத்தின சபாபதி புரம் R. S. Puram | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 11°00′37″N 76°57′01″E / 11.010200°N 76.950400°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் மாவட்டம் |
ஏற்றம் | 452 m (1,483 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 641002 |
தொலைபேசி குறியீடு | +91422xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | கோயம்புத்தூர், காந்திபுரம், டாடாபாத், கணபதி, ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், பீளமேடு |
மாநகராட்சி | கோயம்புத்தூர் மாநகராட்சி |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 452 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஆர். எஸ். புரம் நகரின் புவியியல் ஆள்கூறுகள் 11°00'36.7"N 76°57'01.4"E (அதாவது, 11.010200°N 76.950400°E) ஆகும்.
அருகிலுள்ள ஊர்கள்
தொகுகோயம்புத்தூர், காந்திபுரம், டாடாபாத், கணபதி, ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், பீளமேடு ஆகியவை ஆர். எஸ். புரத்திற்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.
போக்குவரத்து
தொகுசாலைப் போக்குவரத்து
தொகுதிவான் பகதூர் (D. B.) சாலை இங்குள்ள முக்கியமான சாலையாகும். ரூ.24.36 கோடி செலவில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இச்சாலையில் மாதிரிச் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.[7] தடாகம் சாலை, சுக்கிரவார்பேட்டை தெரு, ஆலை (Mill) சாலை, புரூக் பாண்ட் (டாக்டர் கிருஷ்ணசாமி) சாலை, கௌலி பிரவுன் சாலை, மருதமலை சாலை, இராபர்ட்சன் சாலை, தொண்டாமுத்தூர் சாலை ஆகியவை ஆர். எஸ். புரத்தைச் சுற்றியுள்ள சாலைகளாகும். ரூ. 42 கோடி செலவில் 370 கார்கள் நிறுத்துமளவிற்கு, நான்கு அடுக்கு (மல்டி லெவல்) கார் நிறுத்துமிடம் கோவை மாநகராட்சியால் திவான் பகதூர் சாலையில் கட்டப்பட்டுள்ளது.[8]
தொடருந்து போக்குவரத்து
தொகுஆர். எஸ். புரத்திலிருந்து சுமார் 2.5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம், 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதியாகும்.
வான்வழிப் போக்குவரத்து
தொகுஇங்கிருந்து கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது.
கல்வி
தொகுபள்ளி
தொகுநேரு வித்யாலயா என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, பின் ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியாக உயர்வு பெற்று 25 ஆண்டுகளைக் கடந்து சேவை புரிந்து கொண்டிருக்கும் பள்ளி இங்குள்ள இராபர்ட்சன் சாலையில் அமைந்துள்ளது.[9]
சிறந்த காவல் நிலையம்
தொகுநாட்டிலேயே சிறந்த காவல் நிலையம் என்ற தேசிய விருதைப் பெற்றுள்ளது 'ஆர். எஸ். புரம் காவல் நிலையம்'.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lōkanātan̲, Pa (1989). Kalaiñarin̲ kavitā uḷḷam. Pa. Lōkanātan̲.
- ↑ Kalki. Bharatan Publications. 1999.
- ↑ மாலை மலர் (2022-11-28). "கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் தக்காளி விலை சரிவு" (in ta). https://www.maalaimalar.com/news/district/tomato-prices-fall-at-coimbatore-rs-puram-farmers-market-542266.
- ↑ "ஆர்.எஸ்.புரம் நீச்சல் குளத்தை பயிற்சிக்காக திறக்க ஆய்வு :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-01.
- ↑ "ஐ.ஆர்.சி., விதிப்படியே வேகத்தடைகள்: அமைச்சர் வேலு அறிவுறுத்தல் - Dinamalar Tamil News" (in ta). https://m.dinamalar.com/detail.php?id=3183710.
- ↑ "கோவையில் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலையை கண்டித்து அவர்களே போராட்டம்: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கடும் தாக்கு" இம் மூலத்தில் இருந்து 2022-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221201105254/https://www.dinakaran.com/news_detail.asp?Nid=818704.
- ↑ CovaiMail (2020-09-02). "ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலை ஸ்மார்ட் சிட்டி பணி நேரில் ஆய்வு". The Covai Mail (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-01.
- ↑ "ஆர்.எஸ்.புரம் மல்டிலெவல் கார் பார்க்கிங் பணிகள் 100 சதவீதம் நிறைவு இம்மாதம் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்". www.dinakaran.com (in ஆங்கிலம்). Archived from the original on 2022-12-01. பார்க்கப்பட்ட நாள் 2022-12-01.
- ↑ Kul̲antai (Pulavar) (1968). Koṅku nātụ: 1. Patippu. Vēlā Patippakam.
- ↑ "நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-01.