கோயிக்கல் அரண்மனை

கேரளத்தில் உள்ள அரண்மனை

கோயிக்கல் அரண்மனை (Koyikkal Palace) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டம் , நெட்மங்காட்டில் அமைந்துள்ள ஒரு அரண்மனை ஆகும். [1] இந்த அரண்மனை திருவனந்தபுரத்திலிருந்து 18. கி.மீ தொலைவில், பொன்முடி மலைக்கும், குற்றால இருவிக்கும் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் வேணாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த உமயாம்மா ராணிக்காக கட்டப்பட்டது. [2] உமயாம்மா ராணி 1677 மற்றும் 1684 க்கு இடையில் வேனாட்டின் ராணியாக இருந்தார். [3] இந்த அரண்மனை இரட்டை அடுக்குகுகளுடன் சரிவான மேற்கூரை வேய்ந்ததாக கேரள பாரம்பரிய கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இங்கு நாலுகெட்டு என்ற பாரம்பரிய கட்டடக்கலையைக் காணலாம்.

கோயிக்கல் அரண்மனை மற்றும் அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது1677
அமைவிடம்இந்தியா, கேரளம், நெடுமங்காடு
வகைஓவியக் காட்சியகம், தொல்லியல் அருங்காட்சியகம்

கேரள மாநில தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் இந்த அரண்மனைக்குள் கொலுமண்டபம், நாட்டார் கலை அருங்காட்சியகம், நாணயவியல் கண்காட்சியகம் போன்றவற்றைக் காணலாம்.  

நாட்டாரியல் அருங்காட்சியகம்

தொகு
 
சந்திரவலம்

இந்த அரண்மனை வளாகத்தில் கேரள பாரம்பரியத்தையும், அதன் சிறப்பையும் உணரத்தவகையில் 1992இல் நாட்டாரியல் அருங்காட்சியகம் துவக்கபட்டது. அருங்காட்சியகத்தில் பல விந்தையான இசைக்கருவிகள், தொழில் கருவிகள், வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள், நாட்டுப்புற இசைக்கருவிகள் போன்றவை பாதுகாக்கபட்டுவருகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Koyikkal Palace at Nedumangadu". பார்க்கப்பட்ட நாள் 3 February 2015.
  2. "Koyikkal Palace in Kerala tourim website". பார்க்கப்பட்ட நாள் 3 February 2015.
  3. keralatourism.org

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயிக்கல்_அரண்மனை&oldid=4068472" இலிருந்து மீள்விக்கப்பட்டது