கோயிலாக்கண்டி

கோயிலாக்கண்டி அல்லது கோவிலாக்கண்டி யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெற்கில் உள்ள உப்பாறு கடலேரியின் கரையில் அமைந்துள்ள இவ்வூரின் வடக்கில் கைதடியும், கிழக்கில் கைதடி நாவற்குழிப் பகுதிகளும், தெற்கில் கடலேரியும், மேற்கில் நாவற்குழி கிழக்குப் பகுதியும் உள்ளன.[1] இவ்வூர் கோயிலாக்கண்டி கிராம அலுவலர் பிரிவுக்குள் அடங்கியுள்ளது.

நாவற்குழியில் இருந்து பூநகரி நோக்கிச் செல்லும் வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. குடாநாட்டினூடாகச் செல்லும் தொடர்வண்டிப் பாதையும் இவ்வூரை அண்டிச் செல்கிறது.

குறிப்புகள் தொகு

  1. Statistical Information-2010, பக். 17ல் உள்ள நிலப்படத்தைப் பார்க்க.

உசாத்துணைகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயிலாக்கண்டி&oldid=2854183" இலிருந்து மீள்விக்கப்பட்டது