கோரி ஜான்சன்
கோரி ஜான்சன் (Kory Johnson) அமெரிக்க மாநிலமான அரிசோனாவைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.
கோரி ஜான்சன் | |
---|---|
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (1998) |
1991 ஆம் ஆண்டில் ஒன்பது வயது சிறுமியாக இருந்தபோதே கோரி ஜான்சன் தனது உள்ளூர் பகுதியில் கொட்டப்படும் அபாயகரமான கழிவுக் குப்பைகளைத் தடுக்க பாதுகாப்பான சூழலுக்காக குழந்தைகள் என்ற வெற்றிகரமான அமைப்பைத் தொடங்கிவிட்டார். 1996 ஆம் ஆண்டில் கோரி அரசு சார்பற்ற தன்னார்வ சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமூக சேவை அமைப்பான கிரீன்பீசு அமைப்பில் சேர்ந்தார். அரிசோனா மாநிலத்தில் டைகுளோரோ டைபீனைல் டிரைகுளோரோ ஈத்தேன் எனப்படும் டி.டி.டி- கலப்படம் செய்யப்பட்ட கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிராக போராட்டங்களை ஒழுங்கமைக்க உதவினார். [1]
நச்சு மற்றும் அணு மாசுபாட்டிற்கு எதிரான கோரியின் முயற்சிகளுக்காக 1998 ஆம் ஆண்டில் இவருக்கு கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு [2] வழங்கப்பட்டது.
அமெரிக்க மற்றும் மெக்சிகன் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கோரி ஜான்சன் கலிபோர்னியாவின் வார்டு பள்ளத்தாக்கில் அரசாங்க கதிரியக்கக் கழிவுக் குப்பை கொட்டப்படுவதை எதிர்த்து பூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் பிற குழுக்களுடன் சேர்ந்து பணியாற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Women's Studies Quarterly, Spring/Summer 2001, p. 144.
- ↑ "Kory Johnson". goldmanprize.org. Archived from the original on March 6, 2012. பார்க்கப்பட்ட நாள் November 27, 2007.