கோரோட்
கோரோட் (CoRoT) என்பது 2006 முதல் 2013 வரை இயங்கி வந்த ஒரு விண்வெளி தொலைநோக்கி ஆகும். [1] பயணத்தின் இரண்டு நோக்கங்கள் குறுகிய வட்டணை அலைவு நேரங்களைக் கொண்ட சூரியனுக்கு அப்பாற்பட்ட புறக்கோள்களைத் தேடுவது , குறிப்பாக பெரிய புவியளவு கோள்களைத் தேடுவது விண்மீன்களில் சூரியனைப் போன்ற நிலநடுக்க அலைவுகளை உள்ளவற்றை வான்நிலநடுக்கவியல் வழி அளவிடுவதும் ஆகும். ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (எசா), பிற பன்னாட்டுப் பங்காளிகளுடன் இணைந்து பிரெஞ்சு விண்வெளி நிறுவனம் இந்தத் திட்டத்தை வழிநடத்தியது.
குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளில் ஒன்று 2009 இல் கண்டுபிடிக்கப்பட்ட கோரோட் - 7பி எனும் புறக்கோள் ஆகும் , இது ஒரு பாறை அல்லது பொன்ம(உலோக) ஓங்கலான உட்கூறைக் கொண்ட முதல் புறக்கோளாகும்.
2007, ஜனவரி 18 அன்று சோயுசு 2.1b ஏவூர்தியில் இருந்து 2006, டிசம்பர் 27 அன்று 14:28:00 மணிக்கு கோரோட் ஏவப்பட்டது. தொடர்ந்து , 2007 பிப்ரவரி 2 அன்று அறிவியல் தரவுகளைத் திரட்டத் தொடங்கியது. சூரியனுக்கு வெளியே உள்ள புறக்கோள்களைக் கண்டறிவதற்காக அனுப்பப்பட்ட முதல் விண்கலம் இது ஆகும் , இது கெப்ளர் மற்றும் டெஸ் போன்ற மேம்பட்ட ஆய்வுகளுக்கு வழி வகுத்தது. தனது முதல் சூரியனுக்கு வெளியே உள்ள கோரோட் - 1பி புறக்கோளை நோக்கீடுகள் தொடங்கி 3 மாதங்களுக்குப் பிறகு மே 2007 இல் கண்டறிந்தது. விண்கல நடவடிக்கைகள் முதலில் ஏவப்பட்டதிலிருந்து 2.5 ஆண்டுகள் வரை மட்டும் திட்டமிடப்பட்டது , ஆனால் செயல்பாடுகள் 2013 வரை நீட்டிக்கப்பட்டன. 2012, நவம்பர்[2] 2, அன்று , கோரோட் ஒரு கணினி செயலிழப்பைச் சந்தித்தது. பிறகு, அதன் தொலைநோக்கியிலிருந்து எந்த தரவையும் மீட்டெடுக்க இயலவில்லை. முயற்சிகள் தோல்வியடைந்தன. எனவே 24 ஜூன் 2013 அன்று கோரோட் ஓய்வு பெற்றதாகவும் , வளிமண்டலத்தில் எரியும் வகையில் வட்டணை உயரம் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ European Space Agency(26 October 2006). "Europe goes searching for rocky planets". செய்திக் குறிப்பு.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Hand, E. (16 November 2012). "Exoplanet hunter nears its end". Nature News. doi:10.1038/nature.2012.11845. http://www.nature.com/news/exoplanet-hunter-nears-its-end-1.11845.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் கோரோட் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- CoRoT on the CNES site
- CoRoT N2 Public archive