கோர்த்தா (Khordha), கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தின் கோர்த்தா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரமான புவனேஸ்வருக்கு தென்மேற்கில் 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 16 மற்றும் மாநில நெடுஞ்சாலை எண் 16 கோர்த்தா நகரம் வழியாகச் செல்கிறது.

கோர்த்தா
நகரம்
கோர்த்தா is located in ஒடிசா
கோர்த்தா
கோர்த்தா
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கோர்த்தா நகரத்தின் அமைவிடம்
கோர்த்தா is located in இந்தியா
கோர்த்தா
கோர்த்தா
கோர்த்தா (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°11′N 85°37′E / 20.18°N 85.62°E / 20.18; 85.62
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்கோர்த்தா
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்கோர்த்தா நகராட்சி
ஏற்றம்
75 m (246 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,20,204[1]
மொழிகள்
 • அலுவல் மொழிஒடியா
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
752055,752057,752056
தொலைபேசி குறியீடு எண்06755
வாகனப் பதிவுOD-02

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 22 வார்டுகளும், 9,328 வீடுகளும் கொண்ட கோர்த்தா நகரத்தின் மக்கள் தொகை 46,205 ஆகும். அதில் ஆண்கள் 23,937 மற்றும் பெண்கள் 22,268 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 930 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 92.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,716 மற்றும் 1,313 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 90.9%, இசுலாமியர் 6.85%, கிறித்தவர்கள் 2.13% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India: Search Details".
  2. Khordha Population, Religion, Caste, Working Data Khordha, Odisha - Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்த்தா&oldid=3538937" இலிருந்து மீள்விக்கப்பட்டது