கோலழி

(கோலாழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோலழி (Kolazhy) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். திருச்சூர் நகரத்தின் ஒரு முக்கியமான புறநகர் பகுதியாக இந்நகரம் விளங்குகிறது.

கோலழி
കോലഴി
Kolazhy
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்திருச்சூர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்8,445
மொழிகள்
 • அலுவல்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

புவியியல் அமைப்பு

தொகு

10.571889° வடக்கு 76.217735° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் கோலழி பரவியுள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] கோலழி நகரத்தின் மக்கள் தொகை 8,445 ஆகும். இத்தொகையில் 49 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 51 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இந்த நகரத்தின் படிப்பறிவு 85% ஆகும். இது இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 86% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 84% ஆகவும் இருந்தது. கோலழி நகரத்தின் மக்கள் தொகையில் 10% எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். திருச்சூரின் அணிகலனாக விளங்கும் இப்புறநகரத்திற்கு இடம்பெயர்ந்து குடியேறியவர்கள் பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலழி&oldid=3575184" இலிருந்து மீள்விக்கப்பட்டது