கோலெழுத்து

கோலெழுத்து என்பது தென் இந்தியாவில் காணப்பட்ட பண்டைய எழுத்து முறையாகும். இது தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பாவிக்கப்பட்டது.[1][2] இது மலையாளத்தில் மிகச் சமீப காலத்திலும், அதாவது கிட்டத்தட்ட கி. பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. தற்போதும் இதன் குறிப்பிடத்தக்க பாவனை அங்குள்ளது.[3]

வட்டெழுத்திலிருந்து கோலெழுத்து உருவாகியது. இவற்றுக்கிடையே பாரிய வேறுபாடு இல்லை. ஆயினும் பிரதேசத்திற்குப் பிரதேசம் இதில் வேறுபாடுகள் காணப்பட்டன. இது வட்டெழுத்துக் குடும்ப எழுத்துமுறைக்கு உரியதாகும்.[4]

வட்டெழுத்துக்கு முன்பே சங்க காலத்தில் கோலெழுத்தும் கண்ணெழுத்தும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கோலால் எழுதப்படும் எழுத்து கோலெழுத்து என விளக்கப்படுகிறது.[5] இன்னுமொரு கருத்து, "கோடு எழுத்துக்கள்" கொண்டவை கோலெழுத்து என விளக்குகிறது.[6]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Ancient writing schemes of Kerala". Archived from the original on 2009-11-09. பார்க்கப்பட்ட நாள் 2021-09-27.
  2. A. Aiyappan (1948). Report on the Socio-economic Conditions of the Aboriginal Tribes of the Province of Madras. Government Press. p. 131.
  3. "மொழி". பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Grantha, Vattezhuthu, Kolezhuthu, Malayanma, Devanagiri, Brahmi and Tamil alphabets". பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற் காரணம்". பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. K. S. Singh & S. Manoharan, People of India: National Series Volume IX: Languages and Scripts: Archaeological Survey of India, 1993, p. 27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலெழுத்து&oldid=3552296" இலிருந்து மீள்விக்கப்பட்டது