கோழிக்கோடு கலங்கரை விளக்கம்
கோழிக்கோடு கலங்கரை விளக்கம் (Kozhikkode Lighthouse) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், கோழிக்கோடு மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஒரு கலங்கரை விளக்கம் ஆகும். இது 1907 இல் கட்டப்பட்டது. முதல் கலங்கரை விளக்கம் 1847 இல் 33 மீட்டர்கள் (108 அடி) உயரம் கொண்டதாக கட்டப்பட்டது . தற்போதைய கோபுரம் 15 மீட்டர்கள் (49 அடி) உயரம் கொண்டதாகவும், வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளதாகவும் உள்ளது. [2] கோழிக்கோடு அல்லது காலிகட் கலங்கரை விளக்கம் தானியங்கி முறையில் இயங்குகிறது, மேலும் எல்.ஈ.டி ஃப்ளாஷர் கருவி பயன்பாட்டில் உள்ளது.
2012 இல் கல்ங்கரை விளக்கம் | |
கேரளம் | |
ஆள்கூற்று | 11°15′30″N 75°46′09″E / 11.258460°N 75.769189°E |
---|---|
கட்டப்பட்டது | 1847 (முதல்) |
ஒளியூட்டப்பட்டது | 1907 (மாற்றியமைப்பு) |
கட்டுமானம் | கட்டுமான கோபுரம் |
கோபுர வடிவம் | மாடம் மற்றும் விளக்கு கொண்ட உருளை கோபுரம் |
குறியீடுகள்/அமைப்பு | வெள்ளை கோபுரம் மற்றும் விளக்கு |
உயரம் | 15 மீட்டர்கள் (49 அடி) (current) 33 மீட்டர்கள் (108 அடி) (first) |
குவிய உயரம் | 17 மீட்டர்கள் (56 அடி) |
ஒளி மூலம் | முதன்மை ஆற்றல் |
சிறப்பியல்புகள் | Fl (2) W 6 s |
Admiralty எண் | F0686 |
NGA எண் | 27640 |
ARLHS எண் | IND-097[1] |
வரலாறு
தொகு1847 இல், 33-மீட்டர் (108 அடி) உயரம் கொண்டு சுண்ணாம்பு சாந்து மற்றும் கற்களைக் கொண்டு கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. வெளிச்சத்திற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி எரியும் திரி விளக்காக இருந்தது, அதன் பின்புறத்தில் ஒரு உலோக பிரதிபலிப்பான் வைக்கப்பட்டது. 1881 ஆம் ஆண்டில் ஆர்மகன் கலங்கரை விளக்கத்திலிருந்து மாற்றப்பட்டு நான்காவது வரிசை நிலையான விளக்கைப் பயன்படுத்தி ஒளி மேம்படுத்தப்பட்டது. 1885 ஆம் ஆண்டில் மதராஸ் இராஜதானியில் உள்ள கலங்கரை விளக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட பொதுப்பணித் துறையின் பொறியியலாளர் திரு. ஆஷ்பிடெல், விளக்கின் செயல்திறனை மேம்படுத்த கோபுரத்தின் உயரத்தைக் குறைக்க பரிந்துரைத்தார். இதன்பிறகு புதிய கோபுரம் 15 மீட்டர்கள் (49 அடி) உயரம் கொண்டதாக 1903 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. மேலும் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மர்மமான பொறிமுறையைப் பயன்படுத்தி; விளக்கானது நிலையானதில் இருந்து மறைந்து மறைந்து வருவதாக மாற்றப்பட்டது. அசிட்டிலீன் வாயு ஃப்ளாஷரைப் பயன்படுத்தி ஒளிரும் விளக்காக மாற்றுவதன் மூலம் 1924 இல் மேலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி எல்.ஈ.டி யினால் ஒளிரும் விளக்காக மாற்றப்பட்டது.
குறிப்புகள்
தொகு- ↑ Rowlett, Russ. "Lighthouses of India: Kerala and Karnataka". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்).
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ யக்க
வெளி இணைப்புகள்
தொகு- Kozhikkode Lighthouse
- கலங்கரை விளக்கங்கள் மற்றும் விளக்குகள் இயக்குநரகம்