கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி விளையாட்டரங்கம்
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி விளையாட்டரங்கம் (Calicut Medical College Stadium) இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு நகரத்தில் அமைந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக இது ஒலிம்பியன் இரகுமான் விளையாட்டரங்கம் என்றும் அறியப்படுகிறது. கேரளாவின் கோழிக்கோடு நகரில் உள்ள ஒரு கால்பந்து விளையாட்டு அரங்கமாக இது பயன்படுத்தப்படுகிறது. கோழிக்கோடு மாவட்ட விளையாட்டு குழுவும் கோழிக்கோடு மாநகராட்சியும் இணைந்து 35 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளுக்காக இவ்விளையாட்டரங்கை கட்டின. இவ்வரங்கமும் இ.எம்.எசு அரங்கமும் இணைந்து கால்பந்து போட்டிகளை நடத்தின.[1] [2]
முழுமையான பெயர் | ஒலிம்பியன் இரகுமான் விளையாட்டரங்கம், கோழிக்கோடு |
---|---|
முன்னாள் பெயர்கள் | மருத்துவக் கல்லூரி விளையாட்டரங்கம் |
அமைவிடம் | கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி, கோழிக்கோடு |
ஆட்கூற்றுகள் | 11°16′48″N 75°50′14″E / 11.27998°N 75.83736°E |
உரிமையாளர் | கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி |
இயக்குநர் | கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி கேரளா கால்பந்து சங்கம் கேரள துடுப்பாட்ட சங்கம் |
இருக்கை எண்ணிக்கை | 15,000 |
தரைப் பரப்பு | புல் |
கட்டுமானம் | |
Broke ground | 1991 |
கட்டப்பட்டது | 1991 |
திறக்கப்பட்டது | 2013 (திட்டமிடப்பட்டது) |
கட்டுமான செலவு | ரூ.15 கோடி |
General contractor | கிரைபோன்சு இந்தியா கட்டுனர்கள் |
குடியிருப்போர் | |
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி கேரளா பிளாசுட்டர்சு கால்பந்து அணி (மாற்று அரங்கம்) கேரளா கால்பந்து சங்கம் கேரள துடுப்பாட்ட அணி |
அமைவிடம்
தொகுகோழிக்கோடு நகரத்தின் மையப்பகுதியிலிருந்து கிழக்கில் 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) தொலைவில் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இவ்விளையாட்டு வளாகம் அமைந்துள்ளது. கோழிக்கோடு இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 10 கிலோமீட்டர்கள் தொலைவிலும், கோழிக்கோடு பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர்கள் (19 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. மருத்துவக் கல்லூரி எண் 212 தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 5 கிலோமீட்டர்கள் (3.1 mi) தொலைவில் உள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து.
வசதிகள்
தொகு- பின்வரும் வசதிகளுடன் கூடிய மூன்று அடுக்கு புதிய பெவிலியன், வீரர்களுக்கான அறைகள் மற்றும் கழிப்பறைகள்
- ஊடக பணி நிலையம்
- ஊக்கமருந்து சோதனை அறைகள்
- முக்கிய நபர்களுக்கான வசதிகள்
- மெக்சிகோ நாட்டு புல் கொண்ட புல்தரை
- 400 மீட்டர் செயற்கை பாதை
- உள் வடிகால், வெளிப்புற வடிகால் மற்றும் புற வடிகால்
கேரளா பிளாசுட்டர்சு
தொகுகேரளா பிளாசுட்டர்சு கால்பந்து அணியின் மாற்று அணி , கேரளா பிளாசுட்டர்சு கால்பந்து அணியின் பி அணி ஆகியவை கேரளா பிரீமியர் கூட்டமைப்பு போட்டிகள் மற்றும் ஐ-கூட்டமைப்பு இரண்டாம் நிலை போட்டிகள் போன்றவற்றுக்காக இந்த அரங்கத்தை பயன்படுத்துகின்றன.