கோவா மருத்துவக் கல்லூரி
கோவா மருத்துவக் கல்லூரி (Goa Medical College)(ஜி.எம்.சி) என்பது இந்தியாவின் கோவாவில் உள்ள ஓர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாகும். இது ஆசியாவின் பழமையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும்.
குறிக்கோள் ஆங்கிலத்தில் | Truth is Eternal and Beautiful |
---|---|
நிறுவப்பட்டது | 1691 (போர்த்துகீசு, கோவா) |
வகை | சுகாதாரப் பணிகள், ஆய்வு நிறுவனம் |
துறை முதல்வர் | மருத்துவர் பிரதீப் ஜி. நாயக்[1] |
பணியாளர்கள் | 2048[2] |
பட்டப்படிப்பு | 150[3] |
பட்ட மேற்படிப்பு | 31 (MD மாணவர்கள்) 13 (MS மாணவர்கள்) 30 (பட்டயபடிப்பு மாணவர்கள்)[4] |
அமைவு | பாம்போலிம், கோவா, இந்தியா |
வளாகம் | Urban 11,34,798 m2[5] |
Acronym | GMC |
இணையதளம் | www |
இது கோவா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பழமையான கல்வி நிறுவனமாகும்.
வரலாறு
தொகுஆல்வோர் 1வது வைஸ்ராய் பிரான்சிஸ்கோ டி டெவோராவின் கூற்றின்படி, பதினாறாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்களில், கோவா "போர்த்துக்கீசியர்களின் கல்லறை" என்று அழைக்கப்பட்டது. மக்கள்தொகையின் அடர்த்தி காரணமாகவும், சுகாதாரம் மற்றும் மருத்துவ பராமரிப்பு இல்லாததாலும் பழைய நகரத்தின் ஆரோக்கியமற்ற தன்மை வெளிப்படையானதாக இருந்தது. கோவாவில் மருத்துவர்களும் அரிதாகவே இருந்தனர்.
இக்குறையினைத் தீர்க்க கோவாவில் மருத்துவக் கல்விப் படிப்பானது 1691இல் தொடங்கப்பட்டது.[6] இந்தியாவின் துணை மன்னரான ரோட்ரிகோ டா கோஸ்டாவின் வேண்டுகோளின்படி" தலைமை இயற்பியலாளர்" மனோல் ரோயிஸ் டி சாசா நோவா கோவா மருத்துவ வகுப்பினைத் தொடங்கினார்.[7] functioning intermittently in the eighteenth century;[6] பதினெட்டாம் நூற்றாண்டில் இடைவிடாது செயல்பட்டது; 1801 இல், தலைமை மருத்துவர் அன்டோனியோ ஜோஸ் டே மிராண்டாவுக்காக போர்த்துகீசியம் தலைமை "மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை" பாடம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடமானது 1815ஆம் ஆண்டு வரை தலைமை மருத்துவர் கோவாவை விட்டு வெளியேறும் வரை இருந்தது.[8][9]
இருப்பினும், 1842 நவம்பர் 5ஆம் தேதிதான் "கோவா மருத்துவ-அறுவை சிகிச்சை பள்ளி" முறையாகத் தொடங்கப் பெற்றது. 1851 டிசம்பர் 11க்குப் பிறகும் இந்த நிறுவனம் செயல்பாட்டிலிருந்தது.[10] அமைச்சரின் அறிக்கை மற்றும் இணைக்கப்பட்ட ஆணை மூலம், காலனித்துவ அரசாங்கத்தில் விலக்களிக்கப்பட்ட மருத்துவ பள்ளிகளில் கோவா மருத்துவப் பள்ளியும் ஒன்று.[11] இக்காலகட்டத்தில், இங்கிருந்து சுமார் 1,327 மருத்துவர்களும் 469 மருந்தாளுநர்களும் உருவாகினர்.[12][self-published source][13][14][15]
1961ஆம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொண்ட இராணுவ இணைப்பின் போது, கோவாவின் மருத்துவப் பள்ளியானது மும்பை பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்பட்டது.
1986 முதல் இது கோவா பல்கலைக்கழக எல்கையின் கீழ் வந்தது. இதன்பின் மருத்துவ அறுவைச்சிகிச்சை பள்ளி என்பது மருத்துவக் கல்லூரி எனப்பெயர் மாற்றம் பெற்றது.
ஆரம்பத்தில் இக்கல்லூரி பன்ஜிமில் அமைந்திருந்தது. இவ்வமைப்பு போர்த்துகீசிய வம்சாவளியைச் சேர்ந்த கட்டமைப்புடன் கூடியது. பின்னர் இது கோவா பல்கலைக்கழக வளாகத்தின் பகுதியாக இருந்த ஆல்டோ-பாம்போலிமுக்கு 1993ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது.
அமைப்பு
தொகுமனநல மற்றும் மனித நடத்தை நிறுவனம் (பாம்போலிம்), டீ. பி. குன்ஹா மற்றும் மார்பு நோய் மருத்துவமனை (செயின்ட் ஈனெஸ்), கிராம சுகாதார மற்றும் பயிற்சி மையம் (மந்தூர்) மற்றும் நகரச் சுகாதார மையம் (செயின்ட் குரூஸ்) ஆகியவை இந்நிறுவனத்தின் பகுதிகளாகும். கோவா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புகளுடன் எம்.டி., எம். எஸ். படிப்புகளும், சில சிறப்பு நிபுணத்துவ பாட படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
கோவாவின் தலைநகர் பன்ஜிமை அதன் வர்த்தக தலைநகரான மார்கோவுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் கோவா பல் மருத்துவக் கல்லூரி எதிர் எதிராக அமைந்துள்ளன. இந்த இரு நிறுவனங்களையும் இணைக்கும் வகையில் பாதசாரி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கட்டாயப் பயிற்சி திட்டத்தின் கீழ் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையில் பயில மருத்துவ மாணவர்கள் இளநிலை உறைவிட மருத்துவர்களுடன் 15 நாட்கள் சான்கேள் சமூக சுகாதார மையத்தில் பயிற்சியளிக்கப்படுகின்றனர்.
கோவா மருத்துவக் கல்லூரியின் தற்போதைய முதல்வர் மருத்துவர் பிரதீப் ஜி. நாயக் ஆவார்.
சேர்க்கை
தொகுமாணவர் சேர்க்கையானது அகில இந்திய நுழைவுத் தேர்வான நீட் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். 180 எம். பி. பி. எஸ் இடங்களும் 60 துணை மருத்துவ படிப்பிற்கான இடங்களும் இக்கல்லூரியில் உள்ளன.
முதுநிலை
தொகுமுதுநிலைப் பாடப்பிரிவில் 86 இடங்கள் உள்ளன. இதில் 50% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு அடிப்படையில் நிரப்பப்படும்.
== கற்பிக்கப்படும் பாடங்கள்==[16][17]
இளநிலைப் படிப்புகள்
தொகுஎம். பி. பி. எஸ், - குறைந்தது 4 1/2 ஆண்டுகள் வரை, பின்னர் 1 ஆண்டு கட்டாய மருத்துவ பயிற்சி.
முதுநிலைப் படிப்புகள்
தொகுஎம்.டி.
தொகு- மயக்கவியல்
- உயிர் வேதியியல்
- தோல் நோய்
- நோயறிதல் கதிரியக்கவியல்
- தடயவியல் மருத்துவம்
- பொது மருத்துவம்
- நுண்ணுயிரியல்
- மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்
- குழந்தை மருத்துவம்
- நோயியல்
- மருந்தியல்
- உடலியல்
- உளவியல்
- தடுப்பு மற்றும் சமூக மருத்துவம்
- நுரையீரல் மருத்துவம்
- ரேடியோ நோயறிதல்
எம் எஸ்
தொகு- உடற்கூறியல்
- கண் மருத்துவம்
- ஓட்டோலரிங்காலஜி
முதுநிலை பட்டயப் படிப்புகள்
தொகு- மயக்க மருந்து
- நோயறிதல் கதிரியக்கவியல்
- மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்
- குழந்தை மருத்துவம்
- உளவியல் மருத்துவம்
- பொது சுகாதாரம்
- தடயவியல் மருத்துவம் (MCI ஆல் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை)
- டெர்மட்டாலஜி & வி.டி (எம்.சி.ஐ இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை)
குறிப்பிடத்தக்க மேனாள் மாணவர்கள்
தொகு- மருத்துவர் ஃப்ரோலானோ டி மெல்லோ
- மருத்துவர் பிரான்சிஸ்கோ லூயிஸ் கோம்ஸ்
- அகோஸ்டின்ஹோ பெர்னாண்டஸ் (1932-2015), கோன் நாவலாசிரியர்
- ராம பட்
- அம்ருத் பி. கே.
மேலும் காண்க
தொகு- கோவா பல்கலைக்கழகம்
- கோவா பொறியியல் கல்லூரி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Goa Medical College, Panaji at Medical Council of India Website". View details of college – Goa Medical College, Panaji. Archived from the original on 28 செப்டெம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2011.
- ↑ "Goa Medical College". Goa Medical College- Staff Details. Archived from the original on 25 April 2012. பார்க்கப்பட்ட நாள் 25 June 2011.
- ↑ "Goa Medical College". Goa Medical College- Information on MBBS. Archived from the original on 25 April 2012. பார்க்கப்பட்ட நாள் 25 June 2011.
- ↑ "Goa Medical College". Goa Medical College- Admissions for the Post Graduate seats. Archived from the original on 25 April 2012. பார்க்கப்பட்ட நாள் 25 June 2011.
- ↑ "Goa Medical College". Goa Medical College- Particulars of the Organization, Function and Duties. Archived from the original on 25 April 2012. பார்க்கப்பட்ட நாள் 25 June 2011.
- ↑ 6.0 6.1 Prôa, Miguel Pires. "Escolas Superiores" Portuguesas Antes de 1950 (esboço). Blog Gavetas Com Saber. 2008
- ↑ Digby, Anne; Ernst, Waltraud. Crossing Colonial Historiographies: Histories of Colonial and Indigenous Medicines In Transnational Perspective. Cambridge Scholars Publishing. 2010
- ↑ Bastos, Cristiana.Hospitais e sociedade colonial: Esplendor, ruína, memória e mudança em Goa பரணிடப்பட்டது 24 ஆகத்து 2017 at the வந்தவழி இயந்திரம். Revista Ler História, 2010
- ↑ Rodrigues, Eugénia. Moçambique e o Índico: a circulação de saberes e práticas de cura. Universidade de Lisboa, 2012
- ↑ Taimo, Jamisse Uilson. Ensino Superior em Moçambique: História, Política e Gestão பரணிடப்பட்டது 30 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம். Piracicaba: Universidade Metodista de Piracicaba, 2010
- ↑ Os Portugueses no Congo: Lição 6 - Cultura, educação e ensino em Angola பரணிடப்பட்டது 4 சூன் 2014 at the வந்தவழி இயந்திரம். ReoCities Athens - 28 de abril de 2016
- ↑ Faridah Abdul Rashid (2012). Research on the Early Malay Doctors 1900–1957 Malaya and Singapore. Xlibris Corporation. pp. 27–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4691-7243-9. பார்க்கப்பட்ட நாள் 6 April 2013.
- ↑ Narendra K. Wagle; George Coehlo (1995). Goa: Continuity and Change. University of Toronto, Centre for South Asian Studies. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-895214-12-3. பார்க்கப்பட்ட நாள் 6 April 2013.
- ↑ The Hindu Weekly Review. K. Gopalan. Jan 1968. p. 19. பார்க்கப்பட்ட நாள் 6 April 2013.
- ↑ "Home". GOA MEDICAL COLLEGE. Archived from the original on 3 May 2017. பார்க்கப்பட்ட நாள் 7 May 2017.
- ↑ "Archived copy". Archived from the original on 7 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2020-11-03. பார்க்கப்பட்ட நாள் 2020-10-31.
மூலங்கள்
தொகு- Ir para cima ↑