முட்டைக்கோசு
முட்டைக்கோசு அல்லது முட்டைக்கோவா அல்லது கோவா (cabbage) என்பது Brassicaceae (அல்லது Cruciferae) குடும்பத்தைச் சார்ந்த, சில சிற்றின வகைகளைக்(Brassica oleracea or B. oleracea var. capitata,[1]var. tuba, var. sabauda[2] or var. acephala)[3] ) குறிக்கும், ஒரு கீரை ஆகும். இந்த பச்சை இலை மரக்கறி வகையானது, Brassica oleracea எனப்படும் ஒரு காட்டுவகை அல்லது இயற்கைவகையிலிருந்து பெறப்பட்டு, பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டு, பயிரிடும்வகை அல்லது பயிரிடப்படும் வகையாகி, மரக்கறியாக உணவில் பயன்படுத்தப்படும் ஒரு இனம் ஆகும். இது மிகக் குறுகிய தண்டையும், மிகவும் நெருக்கமாக அடுக்கப்பட்டிருக்கும் பெரிய இலைகளையும் கொண்டிருக்கும். இது பூக்கும் தாவர வகையில் வரும், இருவித்திலை, ஈராண்டுத் தாவரம் ஆகும். இது மனிதன், ஏனைய விலங்குகளுக்குத் தேவையான முக்கியமான உயிர்ச்சத்துக்களில் ஒன்றான ரைபோஃப்லேவின் (Riboflavin) எனப்படும் உயிர்ச்சத்து B2 அல்லது சேர்க்கைப்பொருள் E101 ஐக் கொண்டுள்ளது. இந்த உயிர்ச்சத்து பல வளர்சிதைமாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கும்.
முட்டைக்கோசு | |
---|---|
Cabbage and its cross section | |
இனம் | Brassica oleracea |
பயிரிடும்வகைப் பிரிவு | Capitata Group (தலையுரு பிரிவு) |
தோற்றம் | நடுநிலக் கடல், முதலாம் நூற்றாண்டு |
பயிரின வகை உறுப்பினர்கள் | முட்டைக்கோசு (capitata var. alba L.)
Savoy cabbage (capitata var. sabauda L.) |
உணவில் முட்டைக்கோசு
தொகுகிழக்கு, மத்திய ஐரோப்பிய உணவில் முட்டைக்கோசு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. சலாட், சூப் ஆகியவற்றில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
முட்டைக்கோசு உற்பத்தி
தொகுமுட்டைக்கோசை சீனா, இந்தியா, உருசியா பெரும்பான்மையாக உற்பத்தி செய்கின்றன.
உசாத்துணைகள்
தொகு- ↑ "Classification for species Brassica oleracea L." PLANTS database. United States Department of Agriculture. பார்க்கப்பட்ட நாள் 2012-08-10.
- ↑ Delahaut, K. A. and Newenhouse, A. C (1997). "Growing broccoli, cauliflower, cabbage and other cole crops in Wisconsin" (PDF). University of Wisconsin. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2012-08-12.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Brassica oleracea L. – Cabbage". United States Department of Agriculture. பார்க்கப்பட்ட நாள் 2012-08-10.