பயிர்ச்செய்கை
பயிர்ச்செய்கை என்பது நமது தேவைக்காக பயிர்களை வளர்த்தெடுக்க செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் குறிக்கும். மண்ணைப் பதப்படுத்தல், பசளையிடல் மூலம் மண்ணை வளத்துடன் பேணிப் பாதுகாத்தல், நாற்றுமேடை அமைத்து இளம் பயிர்களைப் பேணல், நாற்று நடுதல், நீர்ப்பாசனம் செய்தல், பயிர்களை நோய், பீடைத் தாக்கங்களில் இருந்து பயிரைப் பாதுகாத்தல், பயிரை வளர்த்தெடுத்து, சிறந்த விளைச்சலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்பனவாகும்.
தேவைக்கேற்ப, இடத்துக்கேற்ப, காலத்துக்கேற்ப, சூழ்நிலை வேறுபாடுகளுக்கேற்ப பயிர்ச்செய்கை முறைகளும் வேறுபடும்.
பயிர்ச்செய்கை வகைகள்
தொகு- வீட்டுத் தோட்டம் (House garden) - வீடுகளில் உணவுக்காகவும், வேறு தேவைகளுக்காகவும் பயிர் செய்தல்.
- சேதனப் பயிர்ச்செய்கை (Organic farming) - சேதனப்பசளைகளை மட்டுமே பயன்படுத்தி பயிர் செய்தல்.
- ஒருங்கிணைந்த பயிர்ச்செய்கை (Integrated farming) - குறிப்பிட்ட ஒரு இடத்தில் பலதரப்பட்ட பயிர்செய்கை முறைகளையும் ஒன்றிணைத்து மேலாண்மைக்குட்படுத்தல்.
- பசுமைக்குடில் பயிர்ச்செய்கை (Green House cultivation) - கட்டடங்களின் உள்ளே பயிர்கள் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்து, உள்ளே பயிர்களை வளர்த்தல்.
- மண்ணற்ற பயிர்ச்செய்கை (Hydroponics and aeroponics) - மண்ணில்லாமலேயே பயிருக்குத் தேவையான நீர், ஊட்டச்சத்து என்பவற்றை வழங்கி பயிர் செய்தல். கற்கள், மரங்கள் போன்றவற்றில் தேவையான வளங்களை அளித்து பயிர்களை வளர்க்கலாம். அல்லது தாங்கிகள் இன்றி சுயாதீனமாக தொங்கும் வேர்களுக்கு நேரடியாக ஊட்டச்சத்துக்களை தெளிப்பதன் மூலம் பயிர் வளர்க்கலாம்.
- கொள்கலன் பயிர்ச்செய்கை (Container cultivation) - சிறு பயிர்களை இடக்குறைபாடுள்ள சூழலில் கொள்கலன்களில் வளர்க்கலாம்.
படத்தொகுப்பு
தொகு-
சிறிய ஒரு பசுமைக்குடில்
-
பெரிய தாவரங்களைக் கொண்ட பசுமைக்குடில்
-
நாற்றுக்களைக் கொண்ட பசுமைக்குடில்
-
பெரிய அளவிலான பசுமைக்குடில்
-
வீட்டுத் தோட்டம்
-
கரும்பைக் கையில் வைத்துக்கொண்டு வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் சிறுமி
-
வீட்டுத் தோட்டத்தில் கரட் க்கு நீர் தெளிக்கின்றார்கள்
-
கலிபோர்னியாவிலுள்ள கபே என்ற இடத்தில் சேதனப் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்ட பல்லினப்பயிர்கள்
-
பிரேசிலில் சேதனப் பயிர்ச்செய்கையைக் குறிக்கும் குறியீடு
-
கனிம இழைகளில் (rock wool) வளரும் தக்காளித் தாவரம்
-
படிகக்கல், வைக்கோலில் வளரும் தக்காளித் தாவரம்