கோவிந்த் சாகர்

கோவிந்த் சாகர் (Gobind Sagar) என்பது இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மனித முயற்சியால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் ஆகும். [2] இது பக்ரா அணையால் உருவாகிறது.

கோவிந்த் சாகர்
அமைவிடம்பிலாஸ்பூர் மாவட்டம் (இமாசலப் பிரதேசம்)
ஆள்கூறுகள்31°25′N 76°30′E / 31.417°N 76.500°E / 31.417; 76.500
வகைநீர்த்தேக்கம்
முதன்மை வரத்து4.4- 8.0 மில்லியன் பாய்வு வீதக் கொள்ளளவு அலகு
முதன்மை வெளியேற்றம்4.9- 7.0 மில்லியன் பாய்வு வீதக் கொள்ளளவு அலகு
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச ஆழம்163.07மீட்டர்
நீர்க் கனவளவு7,501,775 ஏக்கர்-அடி கன கிலோமீட்டர்[1]
மேற்கோள்கள்FAO

இந்த நீர்த்தேக்கம் சட்லெஜ் நதியில் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்திற்கு பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கின் நினைவாக பெயரிடப்பட்டது. உலகின் மிக உயரமான ஈர்ப்பு அணைகளில் ஒன்றான பக்ரா அணை அதன் மிகத்தாழ்வான அடித்தளத்திலிருந்து கிட்டத்தட்ட 225.5 மீ உயரத்தில் உள்ளது. அமெரிக்க அணை கட்டுமான பொறியாளர் ஹார்வி ஸ்லோகமின் மேற்பார்வையின் கீழ், [3] பணிகள் 1955 ஆம் ஆண்டில் தொடங்கி 1962 ஆம் ஆண்டில் நிறைவடைந்தன. நீரின் மட்டத்தை பராமரிக்க, பியாஸ் நதியின் ஓட்டமானது கோவிந்த் சாகருக்கு 1976 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பியாஸ்-சட்லெஜ் வாய்க்கால் மூலம் இணைக்கப்பட்டது. [4]

அமைவிடம் மற்றும் பிற அம்சங்கள்

தொகு

இந்த நீர்த்தேக்கம் பிலாஸ்பூர் மாவட்டம் மற்றும் உணா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பக்ரா அணையில் இருந்து பிலாஸ்பூர் சுமார் 91 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. [5]

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகமாக இருக்கும்போது, சுற்றுலா மற்றும் குடிமை விமானத் துறையால் தொடர்ச்சியான படகு அணிவகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. விசைப்படகின் பின் சறுக்குக் கட்டையில் இழுத்துச் செல்லப்படும் கேளிக்கை, படகோட்டம், கயாக்கிங் மற்றும் நீர் துள்ளுந்து பந்தயம் ஆகியவை இந்த காலகட்டத்தில் பிரபலமான நீர் விளையாட்டு நடவடிக்கைகள் ஆகும். ஏரியின் முக்கிய இடங்களில் படகு சவாரிகள் மற்றும் வேக படகு போன்ற நீர் விளையாட்டு ஆகியவற்றுக்கான இடங்கள் அடங்கும்.

கோவிந்த் சாகர் நீர்த்தேக்கமானது 1962 ஆம் ஆண்டில் இல் நீர் கோழி இனத்திற்கான புகலிடமாக அறிவிக்கப்பட்டது. மீன்பிடித்தல் பொதுவாக இங்கு நடைமுறையில் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் சுமார் ஐம்பத்தொன்று இனங்கள் மற்றும் துணை இனங்கள் காணப்படுகின்றன. லேபியோ டெரோ, டோர் பிக்சுராட்டா, மிஸ்டஸ் சீகலா மற்றும் மிரர் கார்ப் ஆகியவை இங்கு காணப்படும் பொதுவான இனங்கள் ஆகும்.

நீர் விளையாட்டு

தொகு

பிலாஸ்பூரில் (இமாச்சலப்பிரதேசம்) கோவிந்த் சாகர் நீர்த்தேக்கம் 56 கி.மீ நீளம் மற்றும் கிட்டத்தட்ட 3 கி.மீ அகலத்தைக் கொண்டுள்ளதது. இந்த நீர்த்தேக்கத்தில் சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகங்களின் ஒத்துழைப்புடன் மலையேறுதல் மற்றும் நீர் விளையாட்டுகள் தொடர்புடைய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இங்குள்ள ஏரியின் நீர் மட்டத்தின் ஏற்ற இறக்க நிலை காரணமாக, நீர் விளையாட்டுகள் முக்கியமாக ஆண்டின் பாதி காலத்திற்கு (ஆகத்து முதல் சனவரி வரை) மட்டுமே நடத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நீச்சல், அலைச்சறுக்கு, விசைப்படகின் பின்புறம் சறுக்குக்கட்டையில் சறுக்கி விளையாடும் கேளிக்கை, கயாக்கிங் போன்ற நீர் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. தொடக்க நிலை, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலை என மூன்று நிலைகளில் இவை தொடர்பான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் துறை பிலாஸ்பூரின் லுஹ்னூ மைதானத்தில் ஒரு பெரிய நீர் விளையாட்டு வளாகத்தை அனைத்து உண்டு- உறைவிடம் மற்றும் உபகரண வசதிகளுடன் கட்டியுள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. [1]
  2. "himachaltourism.gov.in". Archived from the original on 24 March 2010. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.
  3. India After Gandhi. Ramachandra Guha (2008). India After Gandhi, page 215. Pan Macmillan Ltd., London.
  4. http://www.himachalworld.com/himachal-geography/lakes-in-himachal.html
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-11. பார்க்கப்பட்ட நாள் 2020-01-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்த்_சாகர்&oldid=3829625" இலிருந்து மீள்விக்கப்பட்டது