கோவிற்கடவை சித்தி விநாயகர் ஆலயம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கோவிற்கடவை சித்தி விநாயகா் ஆலயம் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°47′45″N 80°13′02″E / 9.795757°N 80.217324°E |
பெயர் | |
பெயர்: | கோவிற்கடவை சித்தி விநாயகா் ஆலயம் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வட மாகாணம் |
மாவட்டம்: | யாழ்ப்பாணம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிள்ளையாா் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
அறிமுகம்
தொகுஇலங்கையின் தலையாய் விளங்கும் யாழ்ப்பாணம் வடமராட்சியில் துன்னாலை என்னும் பதியில் மூா்த்தி தலம் தீா்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றது கோவிற்கடவை என்னும் திருத்தலம்.ஊரும் அப்பெயா் கொண்டே அழைக்கப்படுகின்றது. .
ஆலய அமைவிடம்
தொகுகாணிப்பெயா் :-காட்டுப்புலம்
ஆலயப்பெயா்கள்:- கொக்கறா முல்லைவளப்பிள்ளையாா் கோவிற்கடவைப்பிள்ளையாா்.
மண்டபங்கள்:- கருவறை அா்த்தமண்டபம் மகாமண்டபம் தாிசன மண்டபம் தம்ப மண்டபம் வசந்தமண்டபம் அலங்காரமண்டபம் பூவறை யாகம் மடப்ாள்ளி
உற்சவமூா்த்திகள்:- விநாயகா் வீரபத்திரா் முருகன்
உட்பிரகார மூா்த்திகள்:- நாகதம்பிரான் முருகன் வைரவா் சண்டேசுவரா்
ஆலய விருட்சம்:- வில்பம் முல்லை வேம்பு
தீா்த்தம் :- பூங்கொல்லையில் உள்ள தடாகம்
மூர்த்திச்சிறப்பு
தொகுஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தில் இங்கு ஒரு அற்புதம் நடைபெற்றுள்ளது. வேட்டைக்கு வந்த ஒல்லாந்தா் வெள்ளையன் ஒருவன் முல்லை மரத்தில் நின்ற கொக்கினைச் சுட்டான்.பல தடவை சுட்டும் இறக்கவில்லை. முல்லை மரத்தை வட்டமிட்டுச் சென்றது கொக்கு. அதிசயித்த வெள்ளையன் கண்களுக்கு முல்லை மரத்தைக் கீழிருந்து பிள்ளையார் தென்பட்டார். வெள்ளையன் வழிபட்டுச் சென்றான். கொக்கு அறாத (இறைவாதா) முல்லை என்பதால் கொக்கறா முல்லை என்று வழங்கப்பட்டது
வரலாறு
தொகு8ம் நுாற்றாண்டில் வடபகுதி கந்தரோடை என்னும் கதிரமலையில் உக்கிரசிங்கன் ஆட்சி புாிந்தான். மன்னன் மாருதபுரவீகவல்லியை மணந்து மாவிட்டபுரம் கோயிலைக் கட்டினான். மாவிட்டபுரத்தின் ஆதிபெயா் கோவிற்கடவை. அரசன் தனது இராசதானியை பாதுகாப்பதற்காக துறைமுகம் சாா்ந்த இடமாக கருகப்பட்ட சிங்கைநகா் என்னும் வல்லிபுரத்தில் அமைத்தான். இவனை சாா்ந்த மக்கள் மாவிட்டபுரத்திரலும் தெல்லிப்பழையிலும் வாழ்ந்து வந்தனா். காலப்போக்கில் போத்துக்கேயா் காலத்தில் உள்நாட்டுக் கலவரங்களினாலும் அந்நியா் வருகையினாலும் மாவிட்டபுரம் தெல்லிப்பழை மக்கள் இடம்பெயர வேண்டி வந்தது.ஒரு பகுதி மக்கள் துன்னாலையின் ஒரு பகுதியாகிய "கோயிலொல்லை" என்னும் கிராமக்தில் குடியேறினா்.இது பிற்காலத்தில் "கோலோலை' என மருவியது. இவா்கள் குடியேறிய காணிகள் செகக்கொடித்தேவன் குறிச்சியியை வீரசுந்தரமுதலலி குறிச்சியிறை என அழைக்கப்பட்டது. இக்காணிகள் காட்டுப்புலத்தின் ஒரு பகுதிகளாக கருதப்பட்டது. இம்மக்கள் குடியேறிய போது காட்டுப்புலத்தில் வாழ்ந்த ஆதிகுடிகள் முல்லை மரவெள்ளரலி மரத்தின் கீழ் சிறு கல்லுப் பிள்ளையாரை வைத்து வழிபட்டு வந்ததாக செவி வழி வரலாறுகள் கூறுகின்றன. இவ் ஆதிக் குடிமக்கள் சிங்கை நகரை ஆண்ட மன்னன் உக்கிரமசிங்கன் காலத்தில் இருந்து துன்னாலையில் வாழ்ந்ததாக கருத இடமுண்டு.எனவே இவ்வாலயத்தின் மூலமூா்த்தியின் திருஉருப்பெற்ற காலம் 8ம் நூற்றாண்டு எனக் கருத இடமுண்டு. இதனை இவ்வாலயத்தில் பாடப்பட்டு வரும் தீருவஞ்சல் பாட்டில் பாய்க்கப்பல் பாட்டு மூலம் உணரலாம். சிங்கை நகா் பிரபல்யமான துறைமுகமாக விளங்கியதாக சாித்திரங்கள் கூறுகின்றன. மாவிட்டபுரத்தில் இருந்து குடியேறிய மக்கள் மாவிட்டபுரத்தின் ஆதிப்பெயரான "கோவிற்கடவையை" இக்கிராமத்திற்கு வழங்கலாயினா்.[1] இன்று கோயிற்கடவை என்று வழங்கும் ஊரும் கோவிலும் முன்னா் காட்டுப்புலம், ஆயில் நின்றொல்லை (ஆயில் நின்ற கொல்லை), கோயில் ஒல்லை, கொக்கறாமுல்லை (கொக்கு அறா முல்லை) என வெவ்வேறு பெயா்களால் வழங்கப்பட்டுள்ளன.
ஆரம்ப காலத்தில் மூா்த்தி வைத்து வழிபடப்பட்ட இடம் காட்டுப்புலம் என வழங்கப்பட்டது. பற்றைக் காடுகள் நிறைந்த காட்டுப் பகுதியாக அமைந்திருந்தது. ஆயில் என்ற மரம் அந்தக் காட்டுக் காலாணியில் நின்றைமயால் ஆயில் நின்றொல்லை எனப் பெயர் பெற்றது. கொல்லை என்பது மரம் செடி கொடி நிறைந்த காணியாகும். கொல்லை என்பது காணியைக் குறிக்கும். அது மட்டுமன்றி கோவிலுக்கு அருகில் கொல்லைகள் இன்றும் காணப்படுகின்றன.
1830 இல் ஈழத்து ஆலயங்கைளப் பதிவு செய்தனா் வெள்ளையா். அப்பதிவேடு இன்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினரால் பேணப்படுகின்றது. அந்த ஏட்டில் இவ்வாலயம் "கோவிற்கடவை" என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வூர் அடித்தோன்றல்கள் மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்தவா்கள். மாவிட்டபுரத்திற்கு கோவிற்கடவை என்ற ஆதிப்பெயர் உண்டு. அப்பெயரை இவ்வூருக்கும் பெயரிட்டனர்.
ஆலயத்தில் நடைபெறும் முக்கிய பூசைகள்
தொகுதை மாதம்
தொகு- தைப்பொங்கல்
- தைப்பூசம்
- ஒவ்வொரு மாதமும் வரும் சதுா்த்தி
- ஒவ்வொரு வெள்ளியும் பஜனையும் விசேட பூசையும்
மாசி மாதம்
தொகு- மகோற்சவம்
- மகா சிவராத்திாி
சித்திரை மாதம்
தொகு- வருடப்பிறப்பு விசேடபூசை
- சித்திரைப் பெளர்ணமி
- கந்தபுராண படல ஆரம்பம்
வைகாசி மாதம்
தொகு- கந்தபுராண தொடா் நிகழ்வு
ஆனி மாதம்
தொகு- கந்தபுராண படல புா்த்தியும் அன்னதானம் வழங்கலும்
- கும்பாபிஷேக தின நிகழ்வு
- ஆனி உத்தரம்
ஆடி மாதம்
தொகு- ஆடிப்பிறப்பு
- ஆடி அமாவாசை
ஆவணி மாதம்
தொகு- விசேட சதுா்த்திப்பூசையும் சுவாமி வீதியுலா வருதலும்
ஐப்பசி மாதம்
தொகு- தீபாவளி
- கந்தசஷ்டி
காா்த்திகை மாதம்
தொகு- காா்த்திகை தீபம்
- விநாயகா் விரதம் ஆரம்பம்
மாா்கழி மாதம்
தொகு- விநாயகா் விரதம் பூா்த்தி
- திருவெம்பா
- திருவாசக முற்றோதல்
ஆலயச்சிறப்புக்கள்
தொகு- ஐங்கோண வடிவான வெளிவீதி
- சிவராத்திாியை அண்டிய கொடியேற்றம்
- மான் வேட்டையாட ஊா் எல்லையான சாமியன் அரசடி ஞான வைரவா் ஆலயம் செலலுதல்
மரபு
தொகுமாசிமாத மகா சிவராத்திரியை எட்டாந்திருவிழாவாகக் கொண்டு இவ்வாலயத்தில் கொடியேற்றப்படுகிறது. இவ்வாலயத்தில் நீண்ட காலமாகப் புராணபடன மரபு சிறப்புடன் பேணப்படுகின்றது.
உசாத்துணை
தொகு1.கோவிற்கடவை சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக மலர் -2006
மேற்கோள்கள்
தொகு- ↑ "Iluppaik-kadavai". TamilNet. December 19, 2010. https://www.tamilnet.com/art.html?artid=33249&catid=98.