கோவூர் சுந்தரேஸ்வரர் ஆலயம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிவன் கோவில்

கோவூர் சுந்தரேஸ்வரர் ஆலயம் (Kovur Sundareswarar Temple) சென்னையின் புறநகர்ப்பகுதியான கோவூரில் அமைந்துள்ள ஓர் இந்து ஆலயமாகும்.சென்னையிலுள்ள நவகிரகக் கோயில்களில் இது புதன் ஸ்தலமாகும்.[1] சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ள இவ்வாலயம் சுமார் 965 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. இந்த கோவிலின் முக்கிய தெய்வமான சுந்தரேஸ்வரர் (சிவனின் வடிவம்) மற்றும் (பார்வதி) சவுந்தாரம்பிகையாக அருள்பாலிக்கிறார். கர்நாடக சங்கீத வித்துவான் தியாகராஜரால் கோவூர் பச்சரட்னம் என்று அழைக்கப்பட்ட ஐந்து பாடல்களையும் தொகுத்து வழங்கினார்.

தல புராணம்

தொகு

கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில், காமாட்சி அம்பாள் சிவனின் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். சுந்தரேஸ்வரர் தவத்தில் இருந்தார் அவர் கண்ணைமூடி தவமிருந்ததால் கோவூரைச் சுற்றி உள்ள பகுதிகள் மிகவும் சூடானதாக மாறியது, எல்லா ஜீவராசிகளும் இந்த வெப்பத்தினால் பாதிக்கத் தொடங்கின. ஆனால், சிவன் தனது கண்களை மூடி ஆழ்ந்த தியானம் செய்ததால் அவர் இதை உணரவில்லை. ஆகையால், என்ன செய்வது என்று அறியாத முனிவர்கள் மற்றும் தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு உலகத்தை காப்பாற்ற மகாலட்சுமியை பூலோகத்திற்கு அனுப்பி சிவனின் தவத்தை கலைத்து பூமியை காக்குமாறு கூறினார்.அவர் கோ வேடம் பூண்டார்.கோ என்றால் பசு என்ற மறு பெயர் உண்டு,சிவ ஆராதனை நடத்திய இடம் என்பதால் கோவூர் என்ற பெயர் பெற்றது என நம்பப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 2. புதன்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2023-05-22.
  2. Ganesh (2018-11-09). "Sri Sundareswarar Temple- Kovur | India Temple Tour" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-22.