கோ. ஜெயச்சந்திரன்


நீதியரசர் முனைவர் கோ. ஜெயச்சந்திரன் (Dr.G.JAYACHANDRAN) (பிறப்பு: 01 ஏப்ரல்1965) சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதியரசராக 5 அக்டோபர் 2016 முதல் உள்ளார். [1] இரா. கோபாலன்-ருக்மணி தம்பதியருக்கு 1 ஏப்ரல் 1965 அன்று வேலூரில் ஒரு வேளாண்மைக்குடியில் பிறந்தார்.

நீதியரசர்
முனைவர். கோ. ஜெயச்சந்திரன்
மேன்மை தாங்கிய
நீதியரசர், சென்னை உயர் நீதிமன்றம்
பதவியில்
5 அக்டோபர் 2016. – பதவியில் உள்ளார்
பரிந்துரைப்புஇந்தியக் குடியரசுத் தலைவர்
நியமிப்புதமிழக ஆளுநர்

கல்வி & தொழில்

தொகு

கல்வி

தொகு

கோ. ஜெயச்சந்திரன் பள்ளிக்கல்வியை வேலூரில் உள்ள புனித மேரி மேனிலைப் பள்ளியிலும், 1983ல் ஐந்தாண்டு சட்டப் படிப்பிற்காக சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் முதுநிலை சட்டப்படிப்பை( M.L) 1990ல் முடித்தார். 2001ல் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 28 அக்டோபர் 1988ல் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டு வழக்கறிஞராக தொழில் தொடங்கினார்.

தொழில்

தொகு
  • 1996ம் ஆண்டு முதல் இவர் நடுவண் புலனாய்வுச் செயலகம் மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராக பணியாற்றினார்.
  • 1998ம் ஆண்டில் மத்திய அரசின் வழக்குகளுக்கு வாதாட, சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
  • 6 சூன் 2002 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிபதியாக பதவியேற்றார்.
  • சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் முதன்மை மாவட்ட நீதிபதியாக பதவியேற்றார்.
  • சூலை 2011 முதல் பிப்ரவரி 2015 முடிய சட்டத் துறை செயலாளர், தமிழ்நாடு அரசு
  • 5 அக்டோபர் 2016 முதல் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்

குறிப்பிடத்தக்க தீர்ப்புகள்

தொகு

நடப்பு தமிழக அமைச்சர் க. பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 21 திசம்பர் 2023 அன்று பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தார்.[2]எனவே பொன்முடி சட்டமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._ஜெயச்சந்திரன்&oldid=3851255" இலிருந்து மீள்விக்கப்பட்டது