கோ. நாகப்பா ஆல்வா
டாக்டர். கோடுமேன். நாகப்பா ஆல்வா ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இந்திய பாராளுமன்றத்தின் ராஜ்ய சபா உறுப்பினராக பணியாற்றினாா். மேலும் கர்நாடகா மாநில அரசில் சுகாதார அமைச்சராக இருந்துள்ளாா். இந்த கருநாடக அரசை மைசூா் அரசு என அழைக்கப்பட்டது.
டாக்டர். கோடுமேன். நாகப்பா ஆல்வா | |
---|---|
பாரளுமன்ற உறுப்பினா் | |
தொகுதி | மாநிலங்களவை, மைசூா் மாநிலம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கேட்மேன், தெற்கு கனரா, சென்னை மாகாணம், பிாிட்ஷ் இந்தியா | 26 ஆகத்து 1908
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர் | கல்யாணி ஆல்வா |
பிள்ளைகள் | 3 மகன்கள், 1 மகள் |
வாழிடம் | கோட்மேன் |
{{{blank1}}} | இந்திய பாராளுமன்றம் |
வாழ்க்கை வரலாறு
தொகுதுளு மொழி பேசக்கூடிய விவசாய பன்ட் குடுப்பத்தில் பிறந்தாா். இவா் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, M. B. B. S. பயின்று மருத்துவத்தில் பயிற்சி பெற்றாா். 1957 இல் கருநாடக மாநில சுரக்கல் தொகுதியிலிருந்து கருநாடக சட்டசபைக்கு தாே்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது எனலாம். பின்பு 1962 இல் மறுபடியும் கருநாடக சட்டசபைக்கு தாே்ந்தெடுக்கப்பட்டாா். இந்த முறை மைசூா் மாநில அரசில் (கருநாடகம்) சுகாதார அமைச்சராக பணியாற்றினாா். 1970 முதல் 1976 வரை இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் பணியாற்றினாா். இவரது மகன் ஜீவராஜ் ஆல்வா கருநாடக சட்டசபை உறுப்பினராக பணியாற்றினாா். மற்றும் ராமகிருஷ்ண ஹெக்டே நிர்வாகத்தில் அமைச்சராகவும் பணியாற்றினாா். இவா்கல்யாணி ஆல்வாவை மணந்தார். இவா்களுக்கு நான்கு குழந்தைகள் (மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள்) இருந்தன.
குறிப்புகள்
தொகு- Daiji உலக ஊடகங்கள், "மங்களூர்: புத்தகம் நினைவாக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஆல்வா பிறந்த நூற்றாண்டு வெளியிடப்பட்டது பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்", ஆகஸ்ட் 18, 2010.
- Mangalorean.com, "எம்'Lore புத்தகம் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியிடப்பட்டது பரணிடப்பட்டது 2011-07-14 at the வந்தவழி இயந்திரம்", ஆகஸ்ட் 18, 2010.
- இந்து, "பணக்கார அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் Nagappa ஆல்வா பரணிடப்பட்டது 2009-08-31 at the வந்தவழி இயந்திரம் ", ஆகஸ்ட் 18, 2010.