கோ. புஷ்பலீலா

இந்திய அரசியல்வாதி

கோண்ட்ரு புஷ்பலீலா (Kondru Pushpaleela) (பிறப்பு 1963) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் இப்ராகிம்பட்டினம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார்.[1] இவர், பெண்கள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். இவர், தெலுக்கைத் தாய்மொழியாக கொண்ட மாதிகா சமூகத்தைச் சேர்ந்தவர்.[2]

கோ. புஷ்பலீலா
முன்னாள் அமைச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1963 (அகவை 61–62)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்ஐதராபாத்து

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

புஷ்பலீலா, ஐதராபாத்தில் ஒரு தொழிலதிபருக்கு எட்டு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். திருமணத்திற்குப் பிறகு இளங்கலைப் படிப்பை முடித்தார். 1992 முதல் உசுமானியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1994ல் முதுதத்துவமாணி பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 1999ல் இப்ராகிம் பட்டினத்தில் போட்டியிட்டு பதினைந்து ஆண்டுகாலமாக உறுப்பினராக இருந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார்.[3]

பின்னர், பாரத் இராட்டிர சமிதியில் சேர்ந்தார். [4] பின்னர், இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து கட்சியின் செயலாளராக ஆனார். பின்னர், இறுதியாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்

சொந்த வாழ்க்கை

தொகு

கே. புஷ்பலீலா, 1981ல் கோண்ட்ரு ராம்தாசு என்பவரை மணந்தார். இவர்களுக்கு சுமன் கோண்ட்ரு மற்றும் சுஷ்மா தாஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._புஷ்பலீலா&oldid=3847909" இலிருந்து மீள்விக்கப்பட்டது