கௌரி தர்மபால்

கௌரி தர்மபால் (Gouri Dharmapal)(1931-2014)[2] என்பவர் இந்தியக் கவிஞர்,[3] சமசுகிருத அறிஞர் மற்றும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் உள்ள பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரியில் சமசுகிருதத் துறையின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் 2010ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் கௌரவச் சான்றிதழ் இவருக்கு வழங்கப்பட்டது. தர்மபால் மேற்கு வங்காளத்தின் முதல் பெண் பூசாரி ஆவார்.[4]

கௌரி தர்மபால்
பிறப்பு1931
இறப்பு2014 (வயது 83)
கொல்கத்தா, இந்தியா
தேசியம்இந்தியா
குடியுரிமைஇந்தியா
அறியப்படுவதுகவிஞர், சமசுகிருதம் ஆய்வாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்The Linguistic Atom
வாழ்க்கைத்
துணை
கௌதம் தர்மபால்
விருதுகள்இந்தியக் குடியரசுத் தலைவரின் கௌரவச் சான்றிதழ், 2010[1]

தொழில்

தொகு

கௌரி 1951-ல் கொல்கத்தாவின் புகழ்பெற்ற இசுகாட்டிஷ் தேவாலயக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[5] பின்னர் முதுகலை படிப்புக்காகக் கொல்கத்தா பல்கலைக்கழகத்தால் இஷான் உதவித்தொகை வழங்கப்பட்டது. இவர் இலண்டன் பல்கலைக்கழகம் மற்றும் இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டார். இவர் ஒரு நாவலாசிரியர், கட்டுரையாளர், இந்தியவியலாளர் மற்றும் குழந்தைகள் புத்தகங்களுக்கான கதைசொல்லியாகவும் இருந்துள்ளார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "President of India Confers Certificate of Honour to Sanskrit, Pali/Prakrit, Arabic and Persian Scholars for The Year 2010". Government of India. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014. (deadlink)
  2. "কলকাতার কড়চা". www.anandabazar.com (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.
  3. "Laced with empathy". http://www.telegraphindia.com/1050114/asp/atleisure/story_4253401.asp. 
  4. "Rohini Dharmapal comes as a saviour of the works of her mother". Woman Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-10. பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.
  5. Dharmapal, Gouri.
  6. Note on Contributors in 175th Year Commemoration Volume.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_தர்மபால்&oldid=3683976" இலிருந்து மீள்விக்கப்பட்டது