பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி

பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி (Lady Brabourne College) என்பது இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள பெண்கள் கல்விக்கான ஒரு நிறுவனம் ஆகும். இக்கல்லூரி இளங்கலை மற்றும் பாடங்களில் மாணவிகளைச் சேர்க்கிறது. கொல்கத்தா பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரியாக இது செயல்படுகிறது. இக்கல்லூரி மேற்கு வங்காள மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் கல்லூரியாகும்.[1]

பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி
பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி நுழைவாயில்
வகைஇளநிலை பட்டப்படிப்பு கல்லூரி
உருவாக்கம்1939; 86 ஆண்டுகளுக்கு முன்னர் (1939)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
முதல்வர்சைலி சர்க்கார்
அமைவிடம்
பி-1/2, சுகார்வார்தி பகுதி, பெனியாப்புகுர்
, , ,
700017
,
22°32′44″N 88°22′08″E / 22.5454875°N 88.3689926°E / 22.5454875; 88.3689926
வளாகம்நகரம்
இணையதளம்ladybrabourne.com
பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி is located in மேற்கு வங்காளம்
பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி
Location in மேற்கு வங்காளம்
பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி is located in இந்தியா
பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி
பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி (இந்தியா)

வரலாறு

தொகு

பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி 1939ஆம் ஆண்டு சூலை மாதம் கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா ) பார்க் சர்க்கஸில் உள்ள வாடகை வீடு ஒன்றில் அன்றைய வங்காளத்தின் பிரதம மந்திரி ஏ. கே. பசுலுல் ஹக்கின் முயற்சியைத் தொடர்ந்து நிறுவப்பட்டது.[2] வங்காளத்தின் ஆளுநராக இருந்த 5வது பரோன் பிரபோர்னின் மனைவியான ஆங்கிலோ-ஐரிஷ் உயர் குடியினரான டோரின், பரோனஸ் பிரபோர்னின் நினைவாக இக்கல்லூரிக்குப் பெயரிடப்பட்டது.[2]

பிரபோர்ன் பிரபு 23 பிப்ரவரி 1939-ல் இறந்தார். அடுத்த ஆளுநரான சர் ஜான் ஹெர்பர்ட் 1939 ஆகத்து 26 அன்று இக்கல்லூரிக்கு அடிக்கல்லை நாட்டினார். இக்கல்லூரியில் 50 சதவீத இடங்கள் முசுலிம் பெண்களுக்கும், மீதமுள்ள இடங்கள் இந்துக்கள், பார்சிகள், சீக்கியர்கள், சைனர்கள் மற்றும் பிற இன சமூகத்தினருக்கும் ஒதுக்கப்பட்டது.[2]

விடுதி வசதி முசுலிம்களுக்கென பிரத்தியேகமாக வழங்கப்பட்டிருந்தது. முசுலீம் மாணவர்கள் குறைந்த அளவில் சேர்ந்ததால், கல்லூரியில் இந்து மாணவர் சேர்க்கை தொடங்கியது.[3] அனைத்திந்திய சிறுபான்மை சங்க கருத்தின்படி முசுலிம் மாணவர்கள் கல்லூரியில் சேருவது கடினமானது.[4] 2017-ல் இக்கல்லூரி, கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த முனைவர் பட்டம் பெறுவதற்கான படிப்பினை வழங்குவதற்கான அனுமதியினை வழங்கியது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்

தொகு
 
1948-ல் பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி மாணவர்கள்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ladybrabourne College". www.ladybrabourne.com. பார்க்கப்பட்ட நாள் 2018-01-05.
  2. 2.0 2.1 2.2 Tamanna Khan (2010-07-23). "Brabourne's Bengali Muslim Women : Holding the Mast of Education". The Daily Star இம் மூலத்தில் இருந்து 2019-12-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191228175610/http://archive.thedailystar.net/magazine/2010/07/04/education.htm. 
  3. Mukherjee, Hena (2015-03-11). "Lady Brabourne College". Banglapedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-05.
  4. "Aliah University no longer under Minority Affairs department, Muslims fear this will impact minority enrollment". twocircles.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-05.
  5. "Natasa Dasgupta - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.

வெளி இணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்