அருந்ததி கோஸ்

அருந்ததி கோஸ் (Arundhati Ghose) (25 நவம்பர் 1939 - 25 சூலை 2016) ஒரு இந்திய இராஜதந்திரியாவார். ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த இவர், 1996இல் ஜெனீவாவில் ஆயுதக் குறைப்பு தொடர்பான மாநாட்டில் முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற இந்திய தூதுக்குழுவின் தலைவராகவும் இருந்தார். [1] மேலும், இவர் தென் கொரியா, எகிப்து அரபு குடியரசின் தூதராகவும் பணியாற்றினார்.

அருந்ததி கோஸ்
ஜூலை 2013, வியன்னாவில் நடந்த சிஆயுதக் குறைப்பு தொடர்பான மாநாட்டில் கோஸ் பேசுகிரார்
ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் இந்தியாவின் நிரந்த உறுப்பினர்
இந்திய வெளியுறவுச் சேவை
பதவியில்
1995–1997
எகிப்து அரசின் இந்தியாவின் தூதர்
பதவியில்
1992–1995
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-11-25)25 நவம்பர் 1939
இறப்பு25 சூலை 2016(2016-07-25) (அகவை 76)
தேசியம் இந்தியா
முன்னாள் கல்லூரிலேடி பிராபோர்ன் கல்லூரி
வேலைஇராஜதந்திரி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கோஸ் மும்பையில் வளர்ந்து கதீட்ரல் மற்றும் ஜான் கோனன் பள்ளியில் படித்தார். கொல்கத்தாவிலுள்ள லேடி பிராபோர்ன் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், 1963ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுச் சேவையில் சேருவதற்கு முன்பு சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தில் படித்தார்.

இவர், ஒரு முக்கிய வங்காள குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான ரூமா பாலின் சகோதரியும் பிரசார் பாரதியின் முன்னாள் தலைவரான பாஸ்கர் கோஸின் சகோதரியும் ஆவார். 1997ஆம் ஆண்டில் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட ஒரு சமூக சேவகரும் பத்திரிகையாளருமான சாகரிகா கோஸ் மற்றும் சஞ்சய் கோஸ் ஆகியோரின் அத்தையுமாவார். [2]

தொழில் தொகு

கோஸ் தனது தொழில் வாழ்க்கையில், ஆஸ்திரியா, நெதர்லாந்து, வங்காளதேசம், நியூயார்க் போன்ற நாடுகளில் ஆகியவற்றில் பணியாற்றினார். 1971 வங்காளதேச அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாளராகவும் இருந்தார். [3]

ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கை தொகு

இவர் 2016 இல் புற்றுநோயால் இறக்கும் வரை பல செயல்களில் தீவிரமாக ஈடுபட்டார். இவர் 1998 முதல் 2004 வரை ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) உறுப்பினராக இருந்தார். 1998 முதல் 2001 வரை ஆயுதக் குறைப்பு தொடர்பான ஐ.நா பொதுச்செயலாளரின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார். [4] 2004 முதல் 2005 வரை பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான குழுவில் இந்தியாவிலிருந்து உறுப்பினராக இருந்தார். இவர் 2004 முதல் 2007 வரை பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார். 2007 ஆம் ஆண்டில் வெளியுறவு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஆயுதப் பரவல் மற்றும் குறைப்பு தொடர்பான பணிக்குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.

மரியாதைகள் தொகு

  • மார்ச் 27, 2012 அன்று வங்கதேச அரசாங்கத்தால் "விடுதலைப் போர் மரியாதைக்குரிய நண்பர்கள்" [5] எனக் கௌரவிக்கப்பட்டார்.

குறிப்புகள் தொகு

  1. "Statement made by Ms. Arundhati Ghose, in the Plenary of the Conference on Disarmament on August 8, 1996". Federation of American Scientists. பார்க்கப்பட்ட நாள் 26 July 2016.
  2. "Terrorists, Human Rights and the United Nations". South Asia Terrorism Portal. Archived from the original on 10 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-10-25.
  3. Ghose, Arundhati. "Interview with Amb. Arundhati Ghose". Youtube. Friends of Bangladesh. பார்க்கப்பட்ட நாள் 26 July 2016.
  4. "Advisory Board on Disarmament Matters". United Nations Office for Disarmament Affairs. United Nations. பார்க்கப்பட்ட நாள் 26 July 2016.
  5. "Awards Bestowed by Government of People's Republic of Bangladesh to Indian nationals" (PDF). High Commission of India, Bangladesh. Archived from the original (PDF) on 16 August 2016. பார்க்கப்பட்ட நாள் 26 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருந்ததி_கோஸ்&oldid=3129609" இலிருந்து மீள்விக்கப்பட்டது