முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு

முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு (Comprehensive Nuclear-Test-Ban Treaty, சுருக்கமாக CTBT) எத்தகைய சூழலிலும் (நிலத்தடியில், நீர்பரப்பினடியில், விண்வெளியில் மற்றும் வளிமண்டலத்தில்) இராணுவ பயன்பாட்டிற்கோ அல்லது குடிசார் பயன்பாட்டிற்கோ அணுகுண்டு சோதனைகள் நடத்தபட தடை செய்கிறது. இது ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று நிறைவேற்றப்பட்டாலும் இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை.[1] இந்தியாவும் பாக்கித்தானும் இன்னமும் இதற்கு ஒப்பவில்லை.

முழுமையான அணுகுண்டு சோதனைத்தடை உடன்பாடு
முழுமையான அணுகுண்டு சோதனைத்தடை உடன்பாட்டில் பங்குபெறுவோர்

  அனுபந்தம் 2, கையொப்பிட்டு ஏற்புறுதி வழங்காதவர்
  அனுபந்தம் 2, கையொப்பிட்டவர்
  அனுபந்தம் 2, ஒப்பாதவர்

  அனுபந்தம் 2 இல்லை, கையொப்பிட்டு ஏற்புறுதி வழங்காதவர்
  அனுபந்தம் 2 இல்லை, கையொப்பிட்டவர்
  அனுபந்தம் 2 இல்லை, ஒப்பாதவர்

கையெழுத்திட்டது10 செப்டம்பர் 1996
இடம்நியூயார்க் நகரம்
நடைமுறைக்கு வந்ததுஇன்னும் செயற்படுத்தபடவில்லை
நிலைஅனைத்து 44 அனுபந்தம்2 நாடுகளும் ஏற்றபின் 180 நாட்கள் கழித்து : அல்சீரியா, அர்ச்சென்டினா, ஆத்திரேலியா, ஆஸ்திரியா, வங்காளதேசம், பெல்ஜியம், பிரேசில், பல்கேரியா, கனடா, சிலி, சீனா, கொலம்பியா, வட கொரியா, எகிப்து, பின்லாந்து, பிரான்சு, செருமனி, அங்கேரி, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இசுரேல், இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நெதர்லாந்து, நோர்வே, பாகிஸ்தான், பெரு, போலந்து, ருமேனியா, தென் கொரியா, உருசியா, சிலவாக்கியா, தென் ஆபிரிக்கா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, துருக்கி, உக்ரைன், ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடு, வியட்நாம், காங்கோ மக்களாட்சிக் குடியரசு
கையெழுத்திட்டோர்182
அங்கீகரிப்பவர்கள்153 (உடன்பாடு செயற்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டிய நாடுகள்: சீனா, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, இரான், இசுரேல், வட கொரியா, பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா)

நிகழ்நிலை தொகு

இந்த உடன்பாடு ஐக்கிய நாடுகள் பொது அவையால் 10 செப்டம்பர் 1996ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.[2] நியூயார்க் நகரில் 1996ஆம் ஆண்டு 24 செப்டம்பர் அன்று நாடுகள் கையெழுத்திட திறக்கப்பட்டது.[2] அப்போது அணு ஆயுத நாடுகளாக இருந்த எட்டு நாடுகளில் ஐந்து உட்பட, 71 நாடுகள் முதலில் கையெழுத்திட்டன. மே 2010 நிலவரப்படி , 153 நாடுகள் உடன்பாட்டை ஏற்புறுதி செய்துள்ளன; மேலும் 29 நாடுகள் கையொப்பமிட்டு ஏற்புறுதி செய்யாது உள்ளன.[3]

உடன்பாட்டின் அனுபந்தம் 2இல் பட்டியலிடப்பட்டுள்ள 44 நாடுகளும் ஏற்புறுதி செய்தபின்னர் 180 நாட்கள் கழித்து உடன்பாடு செயலாக்கத்திற்கு வரும். இந்த "அனுபந்தம் 2" நாடுகள் 1994ஆம் ஆண்டிற்கும் 1996ஆம் ஆண்டிற்கும் இடையே அணுகுண்டு சோதனைத்தடை ஒப்பந்தப் பேச்சுகளில் பங்குபெற்ற, அந்நாளில் அணுக்கரு உலைகள் அல்லது ஆய்வு உலைகள் வைத்திருந்த நாடுகளாகும்.[4] ஏப்ரல் 2009 நிலவரப்படி, ஒன்பது அனுபந்த 2 நாடுகள் ஏற்புறுதி வழங்கவில்லை: சீனா, எகிப்து, இந்தோனேசியா, ஈரான், இசுரேல் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு கையொப்பமிட்டு ஏற்புறுதி வழங்காதவையாம்; இந்தியா, வட கொரியா மற்றும் பாகிஸ்தான் கையொப்பமும் இடாதவையாம். 3 மே 2010 அன்று இந்தோனேசியா உடன்பாட்டிற்கு ஏற்புறுதி வழங்குவதற்கான செயன்முறையைத் துவங்கியுள்ளதாக அறிவித்தது.[5]

கடமைகள் தொகு

(உடன்பாட்டு விதி I):[6]

  1. ஒவ்வொரு நாடும் எந்த அணுகுண்டு சோதனை வெடிப்பையும் அல்லது வேறொரு அணுக்கரு வெடிப்பையும் நடத்தாது; தனது கட்டுப்பாட்டில் உள்ள எந்த இடத்திலும் இவ்வாறான வெடிப்புகள் நிகழ்வதைத் தடுக்கும்.
  2. ஒவ்வொரு நாடும் எந்த அணுகுண்டு சோதனை வெடிப்பையும் அல்லது வேறொரு அணுக்கரு வெடிப்பையும் நிகழ்த்த உதவி, ஊக்கம் அல்லது வேறெந்த வகையிலும் பங்கேற்றலை தவிர்க்கும்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.un.org/documents/ga/res/50/ares50-245.htm
  2. 2.0 2.1 United Nations Treaty Collection (2009). "Comprehensive Nuclear-Test-Ban Treaty பரணிடப்பட்டது 2015-04-03 at the வந்தவழி இயந்திரம்". Accessed 23 August 2009.
  3. Preparatory Commission for the Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization (2010). "Status of Signature and Ratification". Accessed 27 May 2010.
  4. "CTBTO Preparatory Commission" பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம், CTBO Press Centre
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-06-07. பார்க்கப்பட்ட நாள் 2011-03-27.
  6. COMPREHENSIVE NUCLEAR-TEST-BAN TREATY பரணிடப்பட்டது 2011-12-02 at the வந்தவழி இயந்திரம், CTBTO

வெளி இணைப்புகள் தொகு