கௌல்டு-யாகோபு வினை

கௌல்டு-யாகோபு வினை (Gould–Jacobs reaction) குயினோலின்களைத் தயாரிக்கின்ற கரிமத் தொகுப்பு வினையாகும். குறிப்பாக இவ்வினையில் 4-குயினோலினால் தயாரிக்கப்படுகிறது. கௌல்டு-யாகோபு வினையில் அனிலின் அல்லது அனிலீன் வழிப்பொருள் முதலில் மலோனிக் அமில வழிப்பொருளான எத்தில்யெத்தாக்சிமெத்திலீன்மலோனேட்டுடன் வினைபுரிகிறது. இதனால் எத்தாக்சி தொகுதி நைட்ரசனால் பதிலீடு செய்யப்படுகிறது. குயினோலின் சூடுபடுத்தப்பட்டு இதன் பயனாக பென்சீன்வளையமாக்கல் நிகழ்கிறது. எசுத்தர் தொகுதி சோடியம் ஐதராக்சைடால் நீராற்பகுக்கப்பட்டு கார்பாக்சிலிக் அமிலமாகவும் பின்னர் அதைத் தொடர்ந்து சூடுபடுத்துவதால் கார்பாக்சில் நீக்கம் நிகழ்ந்து 4-ஐதராக்சிகுயினோலின் உருவாகிறது:[1][2][3].

கௌல்டு-யாகோபு வினை

4,7-டைகுளோரோகுயினோலின் தயாரித்தலை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

  • ஃபுளோக்டாபெனின் மற்றும் கிளாபெனின் இரண்டும் இணையான பெனாமேட்டுகள் ஆகும். இவை கௌல்டு-யாகோபு வினையில் தயாரிக்கப்படுகின்றன[4]
  • ரோசாக்சின், ஆக்சோலினிக் அமிலம் போன்ற குயினோலோன் வகைச் சேர்மங்கள் பலவும் இம்முறையில் தயாரிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gould-Jacobs reaction
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Li, Jie Jack (2009). Gould–Jacobs reaction. பக். 263–265. doi:10.1007/978-3-642-01053-8_113. 
  2. Lengyel, László Csaba; Sipos, Gellért; Sipőcz, Tamás; Vágó, Teréz; Dormán, György; Gerencsér, János; Makara, Gergely; Darvas, Ferenc (2015). "Synthesis of Condensed Heterocycles by the Gould–Jacobs Reaction in a Novel Three-Mode Pyrolysis Reactor". Organic Process Research & Development 19 (3): 399–409. doi:10.1021/op500354z. பன்னாட்டுத் தர தொடர் எண்:1083-6160. 
  3. Gould-Jacobs Reaction. 2010. doi:10.1002/9780470638859.conrr276. 
  4. Organic Syntheses, Coll. Vol. 3, p.272 (1955); Vol. 28, p.38 (1948). Link
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌல்டு-யாகோபு_வினை&oldid=2748193" இலிருந்து மீள்விக்கப்பட்டது