க. இரங்காச்சாரி

இந்தியப் பண்பாட்டியலாளர்

திவான் பகதூர் கடாம்பி ரங்காச்சாரி (Diwan Bahadur Kadambi Rangachari) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தாவரவியலாளரும் இனவியலாளரும் ஆவார். 1868 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இவர் பிறந்தார். பண்பாட்டியல் துறை சார்ந்த இவர், எட்கர் தர்சுடனுடன் இணைந்து தென்னிந்திய இனவியல் பற்றிய ஏழு தொகுதிப் பணிகளுக்கு ஆசிரியராக இருந்தார். கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் தாவரவியலைப் பயிற்றுவித்து, தாவரவியல் தொடர்பான பாடப்புத்தகமும் எழுதினார்.

க. இரங்காச்சாரி
பிறப்பு1868 Edit on Wikidata
இறப்பு1934 Edit on Wikidata
பணிதாவரவியலாளர் edit on wikidata

வாழ்க்கைக் குறிப்பு தொகு

ஓர் எளிய தமிழ்க் குடும்பத்தில் க. ரங்காச்சாரி பிறந்தார். தந்தை இவருடைய இளம்வயதிலேயே இறந்துவிட்டார் என்பதால் ரங்காச்சாரி தனியாக கல்வி கற்பித்து தனது வாழ்க்கையை சம்பாதிக்க வேண்டியிருந்தது. 1888 ஆம் ஆண்டில் சென்னை சென்னை கிறித்துவக் கல்லூரியில் கலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் 1890 ஆம் ஆண்டில் பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் தனது முதுகலைப் படிப்பிற்காக மாநிலக் கல்லூரிக்குச் சென்றார். கற்பிக்கத் தொடங்கி 1895 ஆம் ஆண்டு முதல் அனந்தபூரில் பணிபுரிந்தார். 1897 ஆம் ஆண்டில் ஓர் அரசு அருங்காட்சியகத்தில் ஒரு காப்பாளராக பணியில் சேர்ந்தார். 1902 ஆம் ஆண்டில் இவர் மாநிலக் கல்லூரிக்கு மூத்த உதவிப் பேராசிரியராக மாறினார். 1901 ஆம் ஆண்டில் இனவரைவியலுக்கான செயல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். பிரித்தானிய அருங்காட்சியக நிபுணர் எட்கர் தர்சுடனுடன் இணைந்து தென்னிந்தியாவின் சாதிகள் மற்றும் பழங்குடியினர் பற்றிய ஏழு தொகுதிகளை தொகுக்கும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். 1909 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள விவசாயக் கல்லூரியில் முறையான தாவரவியல் கற்பிப்பதில் ஈடுபட்டார். 1913 ஆம் ஆண்டில் இவரது பணியைப் பாராட்டி அரசாங்கம் இவருக்கு ராய் பகதூர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. 1917 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரசின் தாவரவியல் பிரிவுக்குத் தலைமை வகித்து திருநெல்வேலியின் தாவரங்களைப் பற்றிப் பேசினார். இந்திய தாவரவியல் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினராக இருந்தார் மற்றும் 1922 ஆம் ஆண்டில் அதன் தலைவராகப் பணியாற்றினார். 1923 ஆம் ஆண்டில் விவசாய சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். திவான் பகதூர் என்ற பட்டத்தை பெற்றார்.[1]

1934 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று திவான் பகதூர் கடாம்பி ரங்காச்சாரி காலமானார்.

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._இரங்காச்சாரி&oldid=3898564" இலிருந்து மீள்விக்கப்பட்டது