க. எ. கிருட்டிணமூர்த்தி

இந்திய அரசியல்வாதி

க. எ. கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்படும் கம்பளபாடு எடிகா கிருஷ்ணமூர்த்தி (Kambalapadu Ediga Krishnamurthy) (பிறப்பு 2 அக்டோபர் 1938), தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வர் ஆவார். 2014-2019 ஆம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியின் அமைச்சரவையில் இவர் அமைச்சராக இருந்த காலத்தில் வருவாய், முத்திரைகள் மற்றும் பதிவுத் துறைகளை கவனித்து வந்தார். பட்டிகொண்டா சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தங்குதரி அஞ்சையா அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றினார்.

கிருட்டிணமூர்த்தி கர்நூல் மாவட்டத்தின் தோன் சட்டமன்றத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரசு மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகளிலிருந்தும் பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [1]

சொந்த வாழ்க்கை தொகு

கிருட்டிணமூர்த்தி 1938ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி கர்நூலில் க. எ. மாதன்னா மற்றும் மாதம்மாவுக்கு மகனாகப் பிறந்தார். சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் முதுகலையயும் மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டப் பட்டமும் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை தொகு

முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த தந்தையின் அடிச்சுவடுகளை பின்பற்றி, 1978ல் தந்தை அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிருட்டிணமூர்த்தி அரசியலுக்கு வந்தார். இவர் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையே அடிக்கடி மாறினார்.

1978 இல் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து தோன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக அறிமுகமானார். 1983 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து அதே தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2004ல் கர்நூல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது, இவர் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சராக உள்ளார். மேலும் இவர் வருவாய், முத்திரைகள் மற்றும் பதிவுத் துறைகள் அமைச்சராக இருந்தார். கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "181 – Dhone Assembly Constituency". Archived from the original on 21 June 2008. பார்க்கப்பட்ட நாள் 8 April 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._எ._கிருட்டிணமூர்த்தி&oldid=3819080" இலிருந்து மீள்விக்கப்பட்டது