கந்தையா கனகரத்தினம்

(க. கனகரத்தினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கந்தையா கனகரத்தினம் (Kandiah Kanagaratnam, 28 சூலை 1892 - அக்டோபர் 3, 1962)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற செயலாளராகவும் இருந்தவர்.

கந்தையா கனகரத்தினம்
K. Kanagaratnam
இலங்கை நாடாளுமன்றம்
வட்டுக்கோட்டை
பதவியில்
1947–1952
பின்னவர்வி. வீரசிங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1892-07-28)28 சூலை 1892
இறப்புஅக்டோபர் 3, 1962(1962-10-03) (அகவை 70)
அரசியல் கட்சிஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
தொழில்அரச அதிகாரி
இனம்இலங்கைத் தமிழர்

ஆரம்ப வாழ்க்கை

தொகு

கனகரத்தினம் இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டையில் கந்தையா. செல்லம்மா ஆகியோருக்கு 1892 சூலை 28 இல் (ஆடி 28) பிறந்தார்.[2][3]

அரசுப் பணி

தொகு

கனகரத்தினம் 1911 இல் அரசு எழுத்தர் பணியில் இணைந்தார்.[2] 1925 இல் தலைமைக் கணக்காய்வுப் பரிசோதகரானார்.[2] பின்னர் இவர் பிரதிக் கணக்காய்வாளர் நாயகமாகவும், பின்னர் பதில் கணக்காய்வாளர் நாயகமாகவும் பணியாற்றினார்.[2]

அரசியலில்

தொகு

கனகரத்தினம் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு 9,487 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] 1948 செப்டம்பர் 3 இல் தமிழ்க் காங்கிரசு கட்சி டி. எஸ். சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்ததை அடுத்து கனகரத்தினம் கல்வி அமைச்சருக்கான நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2]

1952 தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட கனகரத்தினம், இம்முறை சுயேட்சை வேட்பாளர் வி. வீரசிங்கத்திடம் 426 வாக்குகளால் தோற்றார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Directory of Past Members: Kanagaratnam, Kandiah". இலங்கை நாடாளுமன்றம்.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 ஆறுமுகம், எஸ். (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. pp. 69–70.
  3. "பெரியார் க. கனகரத்தினம்". 1982. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-04-06.
  5. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-04-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தையா_கனகரத்தினம்&oldid=3547786" இலிருந்து மீள்விக்கப்பட்டது