க. தா. லிங்கநாதன்

கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் (Kanthar Thamotharampillai Linganathan) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.

ஜி. ரி. லிங்கநாதன்
G. T. Linganathan
வவுனியா மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 அக்டோபர் 2013
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இனம்இலங்கைத் தமிழர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

லிங்கநாதன் வவுனியா மாவட்டம் நெடுங்கேணியில் வேளாண்மைக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். அன்றைய ஈழப்போர்ச் சூழலில் இவர் 1983 ஆம் ஆண்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) சேர்ந்து ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்டார்.[1]

அரசியலில்

தொகு

பல போராட்ட அமைப்புகள் சனநாயக அரசியலுக்குத் திரும்பிய வேளையில் லிங்கநாதனும் 1994 ஆம் ஆண்டில் வவுனியா நகரசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது தடவையாகவும் நகரசபை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். பின்னர் சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.[1]

லிங்கநாதன் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு 11,901 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[2][3] இவர் 2013 அக்டோபர் 14 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக புளொட் அமைப்பின் செயலாளர் முன்னிலையில் வவுனியாவில் பதவியேற்றுக் கொண்டார்.[4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._தா._லிங்கநாதன்&oldid=3263874" இலிருந்து மீள்விக்கப்பட்டது