க. பாலகிருஷ்ணன்

க. பாலகிருஷ்ணன் (K. Balakrishnan)(பிறப்பு 5 பிப்ரவரி 1953) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் சிதம்பரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தினைச் சார்ந்தவர் இவர். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] தற்போது இவர் இக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக உள்ளார்.[2]

க. பாலகிருஷ்ணன்
பதவியில்
மே 2011 – 2016
தொகுதி சிதம்பரம்
தனிநபர் தகவல்
பிறப்பு கண்ணன் பாலகிருஷ்ணன்
பெப்ரவரி 5, 1953(1953-02-05)
(வயது 65)
அண்ணாமலை நகர், சிதம்பரம், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழ்க்கை துணைவர்(கள்) ஜான்சிராணி
பெற்றோர் தந்தை: கண்ணன்
தாய்: முத்துலட்சுமி
இருப்பிடம் சிதம்பரம், தமிழ்நாடு, இந்தியா
பணி அரசியல்வாதி

சட்டமன்ற உறுப்பினராக தொகு

பாலகிருஷ்ணன் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

அரசியல் தொகு

பாலகிருஷ்ணன், 2 செப்டம்பர் 2015 அன்று, வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாகத் தொடருந்து நிலையத்தில் நடந்த போராட்டத்தைக் கைவிட மறுத்ததற்காகக் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகப் புகார் அளித்தார். இதனால் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இங்கு இவர் சிகிச்சை பெற்றார். [4] அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே அரசியலில் ஈடுபட்டு, அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து போராடி மக்கள் நலனுக்காகப் பாடுபட்டவர். இவர் பிப்ரவரி 21, 2018 அன்று பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._பாலகிருஷ்ணன்&oldid=3454780" இருந்து மீள்விக்கப்பட்டது