க. யோகசங்கரி

வீரசிங்கம் கணேசசங்கரி யோகசங்கரி (Veerasingam Ganeshasangari Yogasangari, இறப்பு: 19 சூன் 1990) இலங்கைத் தமிழ்ப் போராளியும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

கணேசசங்கரி யோகசங்கரி
G. Yogasangari
இலங்கை நாடாளுமன்றம்
for யாழ்ப்பாண மாவட்டம்
பதவியில்
1989–1990
பின்னவர்கே. சிறிநிவாசன்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு(1990-06-19)19 சூன் 1990
கோடம்பாக்கம், சென்னை, இந்தியா
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்தசங்கரியின் சகோதரரான வி. கணேசசங்கரி என்பவரின் மகன் யோகசங்கரி ஆவார்.[1]

யோகசங்கரி 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2]

யோகசங்கரியும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் 1990 சூன் 19 இல் சென்னை கோடம்பாக்கத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.[3][4] இப்படுகொலைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[5][6]

மேற்கோள்கள் தொகு

  1. டி. பி. எஸ். ஜெயராஜ் (15 சூன் 2008). "Last TULF Leader standing: Sangaree at 75". த நேசன் இம் மூலத்தில் இருந்து 2014-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140220102826/http://www.nation.lk/2008/06/15/newsfe2.htm. 
  2. "Result of Parliamentary General Election 1989" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-04-26.
  3. Parthasarathy, R. (15 சூலை 1990). "A Massacre in Madras". தமிழ் டைம்சு IX (8): 9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/34/3336/3336.pdf. 
  4. Rajasingham, K. T.. "Chapter 44: Eelam war - again". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2002-09-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020917071933/http://www.atimes.com/ind-pak/DF15Df01.html. பார்த்த நாள்: 2015-04-26. 
  5. டி. பி. எஸ். ஜெயராஜ் (16 March 2008). "Assassinating Tamil Parliamentarians: The unceasing waves". த நேசன் இம் மூலத்தில் இருந்து 20 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140220083850/http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm. 
  6. Subramanian, T. S. (14 ஆகத்து 1999). "Chronicle of murders". புரொன்ட்லைன் 16 (17). பன்னாட்டுத் தர தொடர் எண்:0970-1710. http://www.hindu.com/fline/fl1617/16171020.htm. பார்த்த நாள்: 2015-04-26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._யோகசங்கரி&oldid=3547267" இலிருந்து மீள்விக்கப்பட்டது