சக்காக்னைட்டு
கார்பனேட்டு கனிமம்
சக்காக்னைட்டு (Zaccagnaite) என்பது Zn4Al2CO3(OH)12·3H2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இத்தாலி நாட்டின் ஆல்ப்சு மலைப் பகுதியில் கராரா பளிங்கு கற்களில் உள்ள குழிவுகளில் கால்சைட்டுடன் சேர்ந்து வெண்மையான அறுகோண படிகங்களாகத் தோன்றுகிறது. அலுமினியம் நிறைந்த சூழலில் இசுபேலரைட்டின் நீர் வெப்ப மாற்றத்தால் சக்காக்னைட்டு உருவானதாகக் கருதப்படுகிறது. இத்தாலிய கனிம சேகரிப்பாளரான தொமினிகோ சக்கக்னா (1851-1940) நினைவாக கனிமத்திற்கு சக்காக்னைட்டு எனப் பெயரிடப்பட்டது. வெண்மை நிறம் முதல் வெளிர் மஞ்சள் நிறம் வரையிலான நிறத்தில் இது காணப்படுகிறது.[1]
Zaccagnaite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | formula Zn4Al2CO3(OH)12·3H2O |
இனங்காணல் | |
நிறம் | வெண்மை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Zaccagnaite Mineral Data", www.webmineral.com, பார்க்கப்பட்ட நாள் 2024-01-07