சக்தி தொலைக்காட்சி

(சக்தி தொ. கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சக்தி தொலைக்காட்சி என்பது இலங்கையின் முதலாவது முழு நேரத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவையாகும். இது மகாராஜா கூட்டு நிறுவனத்தில் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான சிரச டிவி, எம் டிவி, நியூஸ் பெஸ்ட் என்பன முறையே சிங்கள, ஆங்கில சேவைகளை வழங்குகின்றன.[1]

சக்தி தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 20 அக்டோபர் 1998
உரிமையாளர் எம்டிவி சேனல்
கொள்கைக்குரல் தமிழ் பேசும் மக்களின் சக்தி
நாடு இலங்கை
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இலங்கை,
இணையம்
தலைமையகம் கொழும்பு
துணை அலைவரிசை(கள்) எம் டிவி
சிரச டிவி
நியூஸ் பெஸ்ட்
வலைத்தளம் http://www.shakthitv.lk
கிடைக்ககூடிய தன்மை
புவிக்குரிய
UHF (பதுளை) 51
UHF (கொழும்பு) 25
UHF (மாத்தளை) 25
UHF (மாத்தறை) 25
UHF (நுவரெலியா) 34
UHF (இரத்தினபுரி) 51
UHF (கிளிநொச்சி) 46
இணையத் தொலைக்காட்சி
நேரடி ஒளிபரப்பு

சக்தி தொலைக்காட்சி இந்தியத் தொலைக்காட்சிச் சேவையான சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்புச் செய்துவருகின்றது. இந்த தொலைக்காட்சியை உலகம் முழுவது யூப் தொலைக்காட்சி மூலம் பார்க்கமுடியும்.[2][3]

நிகழ்ச்சிகள்

இந்த தொலைக்காட்சியில் பெரும்பாலான தொடர்கள் தமிழ்நாட்டுத் தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றது. முதல் முதலாக சக்தி தொலைக்காட்சி தயாரித்த சக்தி சூப்பர் ஸ்டார்ஸ் என்ற பாட்டு நிகழ்ச்சி இலங்கையில் மிகவும் பிரபலமானது. அதே போன்று சின்னத்திரை என்ற பெயரில் மாதம் ஒரு கதை என்ற விதத்தில் ஒளிபரப்பான தொடர்கள் இலங்கை தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2016ஆம் ஆண்டில் முதல் முதலில் சக்தி தொலைக்காட்சி மூலம் நீயா என்று இந்தி மொழித் தொடர் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதுவே முதல் முதலில் இலங்கையில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தொடராகும். இதற்கு பிறகு நீயா 2, மகாகாளி போன்ற தொடர்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

சின்னம்

மேற்கோள்கள்

  1. "Television Stations in Sri Lanka". ASIAWAVES: Radio and TV Broadcasting in South and South-East Asia. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
  2. YuppTV to telecast local channels [தொடர்பிழந்த இணைப்பு]. Daily News.
  3. YuppTV forays into Sri Lankan market via Sirasa and Shakthi TV பரணிடப்பட்டது 2015-07-20 at the வந்தவழி இயந்திரம்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_தொலைக்காட்சி&oldid=3895988" இலிருந்து மீள்விக்கப்பட்டது