சக்மா மொழி ஒரு இந்தோ ஆரிய மொழியாகும். இதனைப் பேசுவோரில் பெரும்பான்மையினர் வங்காளதேசத்திலும், ஏனையோர் இந்தியாவிலும், சிலர் மியன்மாரிலும் வாழ்கின்றனர். வங்காளதேசத்தில் இம்மொழி பேசுவோர் சுமார் 312,000 வரை இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இந்தியாவில், முக்கியமாக மிசோரம், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே 80,000, 50,000, 100,000 ஆகிய எண்ணிக்கயில் காணப்படுகின்றனர். மியன்மாரிலும் இவர்கள் 20,000 வரை உள்ளனர். அண்மைக் காலங்களில் இம் மொழி பேசுவோர் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர்.

சக்மா மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3ccp

இம் மொழி தொடக்கத்தில் திபெத்தோ-பர்மிய மொழிக்குடும்பத்துக்கு நெருங்கியதாக இருந்ததாகவும், பின்னர், அருகில் உள்ள, வங்காள மொழிக்கு நெருங்கிய, கிழக்கு இந்தோ-ஆரிய மொழியான சிட்டகோனிய மொழியின் தாக்கத்தினால் பெருமளவு மாற்றமடைந்ததாகத் தெரிகிறது. இதனால் இது தற்கால மொழியியலாளர்களால், இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்துட் சேர்க்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்மா_மொழி&oldid=3493226" இலிருந்து மீள்விக்கப்பட்டது