சங்கப்புலவர் பாடல்தொகை வரிசை

சங்க இலக்கிப் பாடல்களாக இன்று கிடைத்துள்ளவை 2381 பாடல்கள். 3 முதல் 782 வரையில் அடிகளைக் கொண்டனவாக அவை அமைந்துள்ளன. இந்த 2381-ல் ஆசிரியர் பெயர் காணப்படாத பாடல்கள் 102. எஞ்சிய 2279 பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை சு. வையாபுரிப்பிள்ளை கணிப்புப்படி 473. ஒவ்வொரு புலவரும் பாடிய பாடல்களின் எண்ணிக்கையை மையமாகக் கொண்டு வரிசைப்படுத்திக் காண்பதே இந்தத் தொகுப்பு.

100 பாடல்களுக்குக் குறையாமல் பாடிய புலவர்கள் தொகு

  1. 235 பாடல் - கபிலர்
  2. 127 பாடல் - அம்மூவனார்
  3. 110 பாடல் - ஓரம்போகியார்
  4. 105 பாடல் - பேயனார்
  5. 103 பாடல் - ஓதலாந்தையார்

50 பாடல்களுக்குக் குறையாமல் பாடிய புலவர்கள் தொகு

  1. 85 பாடல் - பரணர்
  2. 79 பாடல் - மருதன் இளநாகனார்
  3. 68 பாடல் - பாலை பாடிய பெருங்கடுங்கோ
  4. 59 பாடல் - ஔவையார் (சங்ககாலம்)

20 பாடல்களுக்குக் குறையாமல் பாடிய புலவர்கள் தொகு

  1. 40 பாடல் - நல்லந்துவனார்
  2. 37 பாடல் - நக்கீரர்
  3. 35 பாடல் - உலோச்சனார்
  4. 30 பாடல் - மாமூலனார்
  5. 22 பாடல் - கயமனார்
  6. 21 பாடல் - பெருங்குன்றூர் கிழார்
  7. 20 பாடல் - பேரிசாத்தனார்

20-க்கும் குறைந்த பாடல்கள் பாடிய புலவர்கள் தொகு

  1. 18 பாடல் - 2 பேர்
  2. 17 பாடல் - 2 பேர்
  3. 16 பாடல் - ஒருவர்
  4. 14 பாடல் - ஒருவர்
  5. 13 பாடல் - 4 பேர்
  6. 12 பாடல் - 2 பேர்
  7. 11 பாடல் - 4 பேர்
  8. 10 பாடல் - 8 பேர்
  9. 9 பாடல் - 4 பேர்
  10. 8 பாடல் - 7 பேர்
  11. 7 பாடல் - 7 பேர்
  12. 6 பாடல் - 8 பேர்
  13. 5 பாடல் - 12 பேர்
  14. 4 பாடல் - 15 பேர்
  15. 3 பாடல் - 26 பேர்
  16. 2 பாடல் - 61 பேர்
  17. ஒரு பாடல் - 293 பேர்

கருவி நூல் தொகு

  • சு. வையாபுரிப்பிள்ளை, சங்க இலக்கியம், பாட்டும் தொகையும், பாரி நிலையம் வெளியீடு, முதல் பதிப்பு 1940, இரண்டாமு பதிப்பு 1967