சங்கமித்திரர்

பௌத்த பிக்கு
(சங்கமித்ரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் (பொ.பி. 254 - 267) காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களான முதலாம் சேட்டதிச்சன், மகாசேனன் என்பவர்களை மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகே கோதாபயனின் முதல் மகனான சேட்டதிச்சன் இலங்கைக்கு அரசனானான். அதனால் மித்ரர் சேட்டனுக்கு குருவானாலும் இருவருக்கும் பகை இருந்தது. அதனால் சங்கமித்ரர் இவனது ஆட்சியில் சோழ நாட்டிலேயே இருந்தார். ஆனால் மகாசேனன் தன் அண்ணன் போல் அல்லாமல் சங்கமித்ரர் மகாயான பௌத்தத்தை இலங்கையில் பரப்புவதற்கு பேருதவிகளை செய்தான். சங்கமித்ரர் கையாலேயே இவனுக்கு முடிசூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மூலநூல்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கமித்திரர்&oldid=3277441" இருந்து மீள்விக்கப்பட்டது