சங்கமித்ரா மொகாந்தி

சங்கமித்ரா மொகாந்தி (Sanghamitra Mohanty)(1 ஏப்ரல் 1953 - 1 சூலை 2021 [1]) ஓர் இந்தியக் கணினி விஞ்ஞானி ஆவார். இவர் முதுஅறிவியல். மற்றும் முனைவர் பட்டங்களை இயற்பியலில் முடித்துள்ளார். இவர் 1986 முதல் 2011 வரை உத்கல் பல்கலைக்கழகத்தில்[2] கணினி அறிவியலில் விரிவுரையாளர் மற்றும் பேராசிரியராக பணியாற்றினார். மொகாந்தி ஒடிசாவின் கட்டாக்கில் பிறந்தார்.

சங்கமித்ரா மொகாந்தி
பிறப்பு1 ஏப்ரல் 1953
கட்டாக், இந்தியா
இறப்பு1 சூலை 2021(2021-07-01) (அகவை 68)
புவனேசுவரம், இந்தியா
தேசியம்இந்தியர்

ஆராய்ச்சி

தொகு

மொகந்தி செயற்கை நுண்ணறிவு, பேச்சு செயலாக்கம், படச் செயலாக்கம், இயற்கை மொழி முறையாக்கம், பின்ன வடிவவியல், வானிலை கணிப்பு மற்றும் உயர் ஆற்றல் இயற்பியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்துள்ளார். மொகாந்தி இந்திய மொழி தொழில்நுட்ப தீர்வுகள் மீது பதின்மூன்று அறிவுசார் சொத்துரிமைக்கான காப்புரிமை பெற்றுள்ளார். இவரது 160-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பன்னாட்டு ஆய்விதழ்கள் மற்றும் மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன.[3][4] கல்வி ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக இவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல நிறுவனங்களுக்குச் சென்றுள்ளார்.

விருதுகள்

தொகு

2012-இல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மொகாந்தி ஆற்றிய பங்களிப்பிற்காக ஒடிசா அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒடிசா பிக்யான் அகாதமியின்[5] சமந்தா சந்திரசேகர் விருதைப் பெற்றார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் பெண்கள் பொறியியல் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். மொகாந்தி 2011[6] முதல் 2014 வரை வடக்கு ஒரிசா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். சனவரி 2016-இல் தொடங்கி ஒடிசா பிக்யான் அகாதமியின் தலைவராக இருந்தார்.[7]

இறப்பு

தொகு

மொகாந்தி 2021-இல் கோவிட்-19 பெருந்தொற்று நோயால் இறந்தார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. ପ୍ରଫେସର ସଂଘମିତ୍ରା ମହାନ୍ତିଙ୍କ ପରଲୋକ
  2. "Welcome to OBA". Archived from the original on 19 April 2017. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017.
  3. "Prof. Sanghamitra Mohanty - Google Scholar Citations". Archived from the original on 18 April 2017. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017.
  4. "Sanghamitra Mohanty". பார்க்கப்பட்ட நாள் 7 July 2017.
  5. "Welcome to OBA". Archived from the original on 23 April 2018. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017.
  6. "VCs of three Orissa varsities appointed - Times of India". http://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/VCs-of-three-Orissa-varsities-appointed/articleshow/8121248.cms. 
  7. "Welcome to OBA". Archived from the original on 19 April 2017. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017.
  8. "Former North Odisha University VC Succumbs to COVID-19".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கமித்ரா_மொகாந்தி&oldid=3886975" இலிருந்து மீள்விக்கப்பட்டது