சங்கம்புழா கிருட்டிண பிள்ளை

கேரள கவிஞர்

சங்கம்புழா கிருட்டிணப் பிள்ளை ( மலையாளம் : ചങ്ങമ്പുഴ കൃഷ്ണപിള്ള) - (Changampuzha Krishna Pillai) (பிறப்பு: 1911 அக்டோபர் 10 - இறப்பு 1948 சூன் 17) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒரு பிரபலமான மலையாளக் கவிஞராவார். இவரது காதல் இரங்கற்பாவான 'ரமணன்' (மலையாளம்: രമണന്‍) என்பதற்காக அறியப்பட்டவர். இது வசன வடிவில் எழுதப்பட்ட நாட்டுப்புற இடையர்கள் வாழ்க்கை சார்ந்தாகும். இது 1936 இல் எழுதப்பட்டு மலையாள இலக்கியத்தில் 100,000 பிரதிகள் விற்கப்பட்டது. இது சங்கம்புழாவின் நண்பர் இடப்பள்ளி ராகவன் பிள்ளை இறந்தபின் அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். கேரள பல்கலைக்கழகம் இதை மலையாள இலக்கிய வகுப்பில் ஒரு பாடப்புத்தகமாக பரிந்துரைத்தது. சங்கம்புழாவே அப்போது கேரள பல்கலைக்கழகத்தில் இலக்கிய மாணவராக இருந்தார். இது 1967 ஆம் ஆண்டில் ஒரு திரைப்படமாக மாற்றப்பட்டுள்ளது. தனது எளிய காதல் பாணியால் கவிதைகளை மக்களிடம் கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு. இவர் 37 வயதில் காசநோயால் இறந்தார். இவரது பாணி அடுத்த சில தலைமுறை மலையாள கவிதைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவற்றில் குறிப்பிடத்தக்கவர் பிரபல மலையாள பாடலாசிரியர் வயலார் ராமவர்மா என்பவராவார்.

சங்கம்புழா கிருட்டிண பிள்ளை
ഉഉഉ
சங்கம்புழாவின் சிலை, சங்கம்புழா பூங்கா, கொச்சி
இயற்பெயர்
ചങ്ങമ്പുഴ കൃഷ്ണപിള്ള
பிறப்பு(1911-10-11)11 அக்டோபர் 1911
இடப்பள்ளி, Cochin
இறப்பு11 சூன் 1948(1948-06-11) (அகவை 36)
திருச்சூர், கொச்சி மாநிலம்
அடக்கத்தலம்இடப்பள்ளி
தொழில்கவிஞர், எழுத்தாளர்
மொழிமலையாளம்
தேசியம்இந்தியா
காலம்1931-1948
வகைகாதல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ரமணன்
துணைவர்சிறீதேவி அம்மா
பிள்ளைகள்சிறீகுமார், அஜிதா, ஜயதேவ், இலலிதா

சங்கம்புழாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. [1]

வாழ்க்கை

தொகு

1911 அக்டோபர் 10 ஆம் தேதி, தற்போது கொச்சி நகரத்தின் ஒரு பகுதியான இடப்பள்ளியில், தெக்கெடத்து இராமன் மேனன் மற்றும் சங்கம்புழா பாருக்குட்டி அம்மா ஆகியோருக்குப் பிறந்தார்.[2] சங்கம்புழா கிருட்டிஷ்ணப் பிள்ளை தனது தொடக்கக் கல்வியை அங்கேயே பெற்றார். அலுவா மற்றும் எர்ணாகுளத்தில் பள்ளி கல்வியை முடித்தார். திருவனந்தபுரத்திலுள்ள, மகாராஜா கல்லூரி, எர்ணாகுளம்கல்லூரியில் கல்லூரிக் கல்வியை முடித்தார். புனே மற்றும் கொச்சியில் உள்ள இராணுவ கணக்காளர் அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றிய பின்னர், சட்டப் படிப்பிற்காக சென்னை சென்றார். நிதி சிக்கல்களால் இவரால் அதை முடிக்க முடியவில்லை. எனவே திருச்சூர் சென்று ஒரு பத்திரிகையில் பணியாற்றினார். இந்த சமயத்தில்தான் இவர் தனது பல படைப்புகளை எழுதினார். இவர் ஒரு மாணவராக இருந்தபோதும் எழுதத் தொடங்கினார். பல்கலைக்கழக வகுப்பில் அவர் தனது சொந்த கவிதையையே படிக்க வேண்டியிருந்தது, உண்மையில் ஒரு அரிய அனுபவமாகும்.

இவர் தனது வாழ்க்கையில் சுமார் 25 ஆண்டு படைப்புக் காலம் மட்டுமே இருந்தபோதிலும், வழக்கமான விதிமுறைகளைப் பின்பற்றி எந்த காவியக் கவிதையும் எழுதாமல், இவர் ஒரு காவியக் கவிஞரானார். இவரது புகழ்பெற்ற மேய்ப்பர் இறங்கற்பாவான 'ரமணன்' 100,000 பிரதிகள் விற்கப்பட்டது. இந்த சாதனை மலையாளத்தில் இன்னும் உறுதியாக உள்ளது. பிரபல மலையாள விமர்சகர் ஜோசப் முண்டசெரி, கேரள மாநிலத்தின் முதல் கல்வி அமைச்சராகவும், கொச்சின் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும் இருந்தவர், 'ரமணன்' படிப்பதில் மிகவும் ஈர்க்கப்பட்டார். மேலும் அதன் 15 வது மறுபதிப்புக்கு இறங்கப்பாவைப் புகழ்ந்து தனது சொந்த முன்னுரையையும் எழுதினார்.

படைப்புகள்

தொகு

சங்கம்புழாவின் பிற புகழ்பெற்ற படைப்புகளில் வாழக்குலா, திவ்யகீதம், யவனிகா, பஷ்பஞ்சலி, மனஸ்வினி, சங்கல்பகாந்தி, தேவகீதா, ஸ்பான்டிகுன்னா அஸ்திமாதம், உதயனா லட்சுமி, பட்டுன்னா பிசாசு, புதினம் கலித்தோழி மற்றும் பிற.இவர் தனது காலத்தின் மற்றொரு சிறந்த கவிஞரான இடப்பள்ளி ராகவன் பிள்ளையின் நெருங்கிய நண்பராக இருந்தார். மலையாள இலக்கியத் தொழிலாளர்களின் அமைப்பான 'சமஸ்தா கேரள சாகித்ய பரிசத்' அதன் முதல் மாநாட்டை இடப்பள்ளியில் நடத்தியது. அதன் வெற்றிக்காக சங்கம்புழா கடுமையாக உழைத்தார்.

இறப்பு

தொகு

துறைமுக அறக்கட்டளையில் எழுத்தராக சங்கம்புழா தனது ஒரு தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். உடல்நலம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் இவரால் அங்கு தொடர முடியவில்லை. திருச்சூரில் உள்ள ஒரு அச்சகத்தில் (மங்களோதயம்) மற்றொரு வேலையை மேற்கொண்டார். இவர் திருமணம் செய்துகொண்டு நான்கு குழந்தைகளின் தந்தையானார். அவற்றில் ஒரு இளைய மகன் ஒரு வயதை அடைவதற்குள் இறந்துவிட்டான். பின்னர், இவர் காசநோயால் பாதிப்படையத் தொடங்கினார். மேலும் படுக்கையில் விழுந்தார். இறுதியாக 1948 ஆம் ஆண்டில், சூன் 17 அன்று ஒரு மழை நாளில் மாலை 3 மணியளவில், இவர் தனது முப்பத்தி ஆறு வயது மற்றும் ஒன்பது மாதங்களில் இறந்தார். இவரது உடல் இடப்பள்ளியில் உள்ள இவரது வீட்டின் வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும், மலையாள மொழி ஆர்வலர்கள் பார்வையிடும் பொருத்தமான நினைவுச்சின்னம் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இப்போது இவரது இளைய மகள் இலலிதா அங்கு வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி 54 வயதுவரை வாழ்ந்தார். இறுதியாக அவரும் 2002 இல் இறந்தார். இவரது மூத்த மகன் சிறீகுமார் 2004 இல் ஒருசாலை விபத்தில் இறந்தார். இவரது மூத்த மகள் அஜிதா 1980 களின் பிற்பகுதியில் தனது முழு குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டார்.

சங்கம்புழாவின் வாழ்க்கை வரலாறு சங்கம்புழா கிருஷ்ணபிள்ளை: நட்சத்திரங்கலுடே சினேகாபஜனம் என்ற பெயரில் எம்.கே.சானு என்பவரல் 1988 இல் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Fahad Fazil to become Changampuzha". malayalam.webduniya.com. 24 December 2012.
  2. "Changampuzha Krishna Pillai - Biography". www.keralasahityaakademi.org. Archived from the original on 2017-06-19. பார்க்கப்பட்ட நாள் 2017-03-26.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Changampuzha Krishna Pillai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.