சங்கரா கண் மருத்துவமனை

தமிழ்நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனை

சங்கரா கண் மருத்துவமனை (Sankara Eye Hospital) என்பது, இலாப நோக்கற்ற அறக்கட்டளை அல்ல. இது மலிவு கண் பராமரிப்பு மற்றும் இந்தியாவில் குணப்படுத்தக்கூடிய கண் குருட்டுத்தன்மையை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. [1] தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் தலைமையகத்தை கொண்ட சங்கரா கண் மருத்துவமனை, இந்தியாவின் மிகப்பெரிய சமூக கண் பராமரிப்பு வழங்குநர்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் பத்து சிறப்பு கண் பராமரிப்பு மருத்துவமனைகள் ஆண்டுதோறும் 150,000 இலவச கண் அறுவை சிகிச்சைகள் செய்கின்றன.

இந்த மருத்துவமனை 80:20 வணிக மாதிரியைப் பின்பற்றுகிறது. இதில் நாட்டின் கிராமப்புறங்களில் இருந்து 80 சதவீத நோயாளிகள் இலவசமாக சிகிச்சை பெறுகின்றனர். மீதமுள்ள 20 சதவீதம் பேர் சமூகத்தின் பணக்காரர்கள் மற்றும் நடுத்தர வருமான பிரிவினர் ஆவார்கள். இந்த 20 சதவீதம் பேர், அவர்களின் சிகிச்சைக்கு பணம் செலுத்துகிறார்கள். இதன்மூலம் இலவச அறுவை சிகிச்சைகளுக்கு குறுக்கு மானியம் வழங்குவதோடு மருத்துவமனையை தன்னிறைவு பெறச் செய்கிறது. [2] 2013 ஆம் ஆண்டில், சங்கரா மருத்துவமனை, தனது ஒரு மில்லியன் இலவச கண் அறுவை சிகிச்சையை நடத்தியது. [3]

வரலாறு தொகு

இந்த அமைப்பை, கோயம்புத்தூரின் ஆரம்பகால மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர், ஆர். வி. ரமணியும் அவரது மனைவியான மருத்துவர் ராதா ராமணியும் ஆரம்பித்தனர். சங்கரா கண் அறக்கட்டளையின் தோற்றத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி மருத்துவ அறக்கட்டளையில் காணலாம். இயக்கத்தின் ஆரம்ப 5 ஆண்டுகளில், கௌரவ மருத்துவர்கள் குழு மெதுவாக விரிவடைந்தது. மேலும் பல்வேறு சிறப்பு மருத்துவங்களைச் சேர்ந்த 75 ஆலோசகர்கள் ஒரு கௌரவ திறனில் அணியில் சேர முன்வந்தனர். 1982ம் ஆண்டு வாக்கில், அறக்கட்டளையின் நடவடிக்கைகள் கணிசமாக வளர்ந்தன. மேலும் 1985 ஆம் ஆண்டில், சமூக கண் பராமரிப்பை முக்கிய சிறப்பு நடவடிக்கையாக, அறக்கட்டளை அடையாளம் கண்டது. மறைந்த என்.நடராஜன் மற்றும் குடும்பத்தினர் நன்கொடையளித்த நிலத்தில் கோயம்புத்தூர் சிவானந்தபுரத்தில் சங்கரா கண் மருத்துவமனை நிறுவப்பட்டது. [4]

விரிவாக்கம் தொகு

சங்கரா கண் மருத்துவமனை ஆரம்பத்தில் இருந்தே 80:20 மாதிரியைப் பிரதிபலிக்கும் வகையில் நாடு முழுவதும் 10 மருத்துவமனைகளை நிறுவியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம் குண்டூரில், சங்கரா கண் மருத்துவமனை 2004ம் ஆண்டு, மார்ச்சு மாதத்தில் நிறுவப்பட்டது. 4.35 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை 225 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக உள்ளது.

தமிழ்நாடு, கிருஷ்ணன்கோயில், சங்கரா கண் மருத்துவமனை, 2004ம் ஆண்டு, பிப்ரவரி 4, அன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ விஜய்குமார் ஐ.ஏ.எஸ் மற்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ முகமது அஸ்லம் ஐ.ஏ.எஸ். அவர்களால் திறக்கப்பட்டது. 6.1 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை 225 படுக்கை வசதி கொண்டதாக உள்ளது.

குசராத்து, ஆனந்த் சங்கரா கண் மருத்துவமனை, 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த மருத்துவமனையை அப்போதைய முதல்வர் ஸ்ரீ நரேந்திர மோடி திறந்து வைத்தார். 5.5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை 225 படுக்கை வசதி கொண்டது. [5]

கருநாடகம், பெங்களூருவில், 2008 இல் சங்கரா கண் மருத்துவமனை, திறக்கப்பட்டது. இது தன்னிறைவை அடைந்துள்ளது. ஏனெனில் பணம் செலுத்தும் நோயாளிகளால் அதை ஈர்க்க முடிகிறது. 4 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை 225 படுக்கை வசதி கொண்டதாக அமைந்துள்ளது. மேலும், சிறந்த சமூக கண் திட்டத்தை வழங்கியதற்காக “நம்ம பெங்களூரு” போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளது.

கருநாடகம், சீமக்காவில் , அக்டோபர் 12, 2008 அன்று சங்கரா கண் மருத்துவமனை திறக்கப்பட்டது. சீமக்காவைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் குழுவின் முன்முயற்சியால் இது சாத்தியமானது. சங்கராவைப் பற்றி கேள்விப்பட்டு, சீமக்காவில் ஒரு மருத்துவமனை அமைப்பதற்காக குழுவை அணுகினர். 5.5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை 225 படுக்கை வசதி கொண்டதாக உள்ளது. [6]

தமிழ்நாடு கோயம்புத்தூரில், (ஆர்.எஸ்.புரம்) 2011 ஆம் ஆண்டில் இந்த மருத்துவமனை நிறுவப்பட்டது. இங்கு, அறுவை சிகிச்சை அரங்கு வளாகம், வெளிநோயாளர் பார்வையிடும் வசதி, மற்றும் கண் சம்பந்தப்பட்ட சேவைகளுடன் பகல்நேர அறுவை சிகிச்சை செய்யும் வசதியுடன் இந்த மருத்துவமனை செயல்படுகிறது.

லூதியானா, பஞ்சாப் ஏப்ரல் 2, 2012 அன்று பஞ்சாப் விதான சபையின் சபாநாயகர் சரஞ்சீத் சிங் அத்வால் அவர்களால், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் மற்றும் சிங் சாஹிப் கியானி குர்பச்சன் சிங், ஜாதேதரின் அகல் தக்த் சாகிப் போன்றோர் முன்னிலையில் இம் மருத்துவமனை திறக்கப்பட்டது. 2 ஏக்கருக்கும் அதிகமான பரிசளிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் மொத்தம் 125 படுக்கைகள் உள்ளன. இதில், 100 இலவச நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மற்றும் பணம் செலுத்தும் நோயாளிகளுக்கு 25 அறைகள் உள்ளன. [7]

கான்பூர், உத்தரப்பிரதேச சங்கரா கண் மருத்துவமனை, கான்பூர், உத்தரபிரதேசம் அக்டோபர் 12, 2014 அன்று திறக்கப்பட்டது. தொடக்க விழாவிற்கு காஞ்சியைச் சேர்ந்த சங்கராச்சாரியார் கலந்து கொண்டார். [8]

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் சங்கரா கண் மருத்துவமனை 2017 டிசம்பரில் முதல் முறையாக ஜெய்ப்பூரின் கண் பராமரிப்பு தேவைகளுக்கான கதவுகளைத் திறக்கிறது. கண்புரை, விழித்திரை அறுவை சிகிச்சைகள், கார்னியல் மாற்று அறுவை சிகிச்சைகள், குழந்தை கண் பராமரிப்பு மற்றும் ஸ்குவிண்ட்ஸ், கிளாகோமாவின் மேம்பட்ட கண் பராமரிப்பு அறுவை சிகிச்சைகளுக்கு பிரதிபலிப்புகளைச் செய்ய அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த மருத்துவமனை ஒரு சிறந்த மையமாகும். மேலும், இது, ஜெய்ப்பூர் உள்ளூர் சமூகத்திலிருந்தும், எல்லைக்கு அப்பாற்பட்ட நமது அன்பான ராஜஸ்தானிக்கு அதன் கவனிப்பு மற்றும் ஆறுதலால் முழுமையான குணப்படுத்துதலை வழங்குகிறது. கண் பராமரிப்பு மற்றும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்த நோயாளியின் தேவைகளைச் சுற்றி மருத்துவமனையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு வடிவமைப்பு மிகச்சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

வரவிருக்கும் திட்டங்கள் தொகு

80:20 மாதிரியின் அடுத்த மூன்று பிரதிகள் “வந்தேமாதரம்” என்ற தலைப்பில் உள்ளது. இது ஜெய்ப்பூர் - ராஜஸ்தான், இந்தூர் - மத்திய பிரதேசம், ஹைதராபாத் - தெலுங்கானா, கஞ்சம் - ஒடிசா [9] மற்றும் மும்பை - மகாராஷ்டிரா போன்ற இடங்களில் மருத்துவமனை அமைக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.

இதனையும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. BHAGAT, RASHEEDA (27 September 2011). "The magic of social enterprise". பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
  2. http://www.justmeans.com/blogs/social-entrepreneur-bringing-quality-vision-care-to-india%E2%80%99s-poor
  3. "The Tribune, Chandigarh, India - Main News". பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
  4. "How it began at Sankara Eye Care Institutions - Real NGOs, Real Stories, Real Impact". 6 June 2014. Archived from the original on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
  5. Reporter, B. S. (10 October 2008). "Sankara sets up eye hospital in Anand". பார்க்கப்பட்ட நாள் 6 October 2016 – via Business Standard.
  6. "Sankara Eye Hospital, Shimoga - SANKARA EYE FOUNDATION". Archived from the original on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
  7. "Sankara Eye Care to open hospital in city on April 1 - Indian Express". பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
  8. http://www.indiainfoline.com/article/print/news-sector-pharma-healthcare/sankara-eye-hospital-inaugurate-in-kanpur-114101800195_1.html
  9. Reporter, Staff (14 April 2016). "Total green hospital complex coming up". பார்க்கப்பட்ட நாள் 6 October 2016 – via The Hindu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரா_கண்_மருத்துவமனை&oldid=3734080" இலிருந்து மீள்விக்கப்பட்டது