அகர்வால் கண் மருத்துவமனை

அகர்வால் கண் மருத்துவமனை (Dr. Agarwal's Eye Hospital) தமிழ்நாட்டின் சென்னை மாநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. இதனை கண் மருத்துவர்களான ஜெய்வீர் அகர்வால்[1] டாக்டர் ஜெய்வீர் அகர்வாலின் மனைவி மற்றும் மகன் ஆகியோரும் கண் மருத்துவர் ஆவர். ஜெய்வீர் அகர்வால் 16 நவம்பர் 2009 அன்று காலமானார்.[2][3][4] மற்றும் அவரது மனைவி தாகிரா அகர்வால் ஆகியோர் இணைந்து 1957ம் ஆண்டில் நிறுவினர். தற்போது இக்கண் மருத்துவ மனையின் கிளைகள் இந்தியா மட்டுமல்லாமல் 10 ஆப்பிரிக்கா நாடுகளில் 15 கண் மருத்து மையங்கள் கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 103 கண் மருத்துவ மையங்களுடன் இயங்குகிறது.[5][6][7] அகர்வால் மருத்துவமனையின் தற்போதைய தலைவரும், மேலாண்மை இயக்குநரான அமர் அகர்வால் உள்ளார்.[8]

டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை
வகைபொது நிறுவனம்
நிறுவுகை1957; 67 ஆண்டுகளுக்கு முன்னர் (1957)
சேவை வழங்கும் பகுதிஇந்தியா, கானா, கென்யா, மடகாஸ்கர், மொரிசியஸ் மொசாம்பிக், நைஜீரியா, உருவாண்டா, தான்சானியா, உகாண்டா, சாம்பியா
முதன்மை நபர்கள்மருத்துவர் அமர் அகர்வால்
தொழில்துறைநலம் பேணல்
உற்பத்திகள்கண் மருத்துவம்
கண் மருத்துவப் படிப்புகள்
இணையத்தளம்www.dragarwal.com

கண் மருத்துவ மையங்கள்

தொகு

இந்தியா

தொகு
 
அகர்வால் கண் மருத்துமனை, சென்னையில் ஒரு கிளை

அகர்வால் மருத்துவமனை சென்னையில் மட்டும் 16 கிளைகளும், பிற மாவட்டங்களில் 16 கிளைகளும் உள்ளது. பெங்களூரு]] நகரத்தில் 11 கிளைகளும்; தெலங்காணா மாநிலத்தில் 8 கிளைகளும்; ஆந்திர மாநிலத்தில் 5 கிளைகளும்;[9] ஜெய்ப்பூரில் ஒரு கிளையும், அந்தமானின் போர்ட் பிளேரில் ஒரு கிளையும்; கேரளா மாநிலத்தில் 2 கிளைகளும்; கர்நாடகாவில் 3 மூன்று கிளைகளும்; ஒடிசா மாநிலத்தில் 2 கிளைகளும்; மகாராட்டிரா மாநிலத்தில் 4 கிளைகளும்; மத்தியப் பிரதேசத்தில் 3 கிளைகளும்; குஜராத்தில் 6 கிளைகளும் கொண்டுள்ளது.[10]

5 ஆகஸ்டு 2022 அன்று மகாராட்டிரா மாநிலத்தில் மேலும் 5 கண் மருத்துவமனைகளை துவங்கத் திட்டமிட்டுள்ளது.

வெளி நாடுகளில்

தொகு

அகர்வால் மருத்துவமனை கானா, கென்யா, மடகாஸ்கர், மொரிசியஸ் மொசாம்பிக், நைஜீரியா, உருவாண்டா, தான்சானியா, உகாண்டா மற்றும் சாம்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் 15 கண் மருத்துவமனைகளைக் கொண்டுள்ளது.[7]

கல்வி மற்றும் பயிற்சி

தொகு

சென்னை அகர்வால் மருத்துவமனையின் கண் மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவம் தொடர்பான மருத்துவப் படிப்புகளும், இள நிலை மற்று முதுநிலை பார்வைத்திறனளவீடு படிப்புகளும் கற்றுத்தரப்படுகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Padma Awards presented". தி இந்து. 21 March 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/padma-awards-presented/article3167353.ece. 
  2. "Founder of Dr Agarwal's Eye Hospital Passes Away". The Financial Express (India). November 2009. http://healthcare.financialexpress.com/200912/market41.shtml. 
  3. Kannan, Ramya (16 November 2009). "Ophthalmologist Jaiveer Agarwal passes away". தி இந்து. https://www.thehindu.com/news/cities/chennai/Ophthalmologist-Jaiveer-Agarwal-passes-away/article16892538.ece. 
  4. "Services at Dr. Agarwal's Eye Hospital". Dr. Agarwal's Eye Hospital. Archived from the original on 2014-02-21.
  5. "Insight into Healthcare - Dr Agarwal's Eye Hospital, Chennai". The Financial Express (India). July 2008. http://healthcare.financialexpress.com/200807/coverstory09.shtml. 
  6. Bureau, BL Chennai (2022-08-05). "Dr Agarwals acquires five eye hospitals in Pune". www.thehindubusinessline.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
  7. 7.0 7.1 "110+ Eye Hospitals - Find Eye Hospitals Near You for Eye Check-up & Treatment Online". Dr. Agarwals (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
  8. www.ETHealthworld.com. "Interview: Dr. Amar Agarwal, Chairman & MD, Dr. Agarwal's Eye Hospital, Chennai - ET HealthWorld". ETHealthworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-11.
  9. "Dr Agarwal's Eye Hospital entered Andhra Pradesh with five branches". தி இந்து. 9 May 2012 இம் மூலத்தில் இருந்து 19 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140219162216/http://www.thehindubusinessline.com/industry-and-economy/dr-agarwals-eye-hospital-enters-ap/article3401314.ecep. 
  10. "Dr. Agarwal's Eye Hospitals Branches". Dr. Agarwal's Eye Hospital. Archived from the original on 2014-02-23.