சங்கர் இராமகிருட்டிணன்

மலையாளத் திரைப்பட இயக்குநர்

சங்கர் இராமகிருட்டிணன் (Shanker Ramakrishnan) ஒரு இந்தியத் திரைப்பட திரைக்கதை எழுத்தாளரும், இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமாவார். இவர் முதன்மையாக மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார் .

சங்கர் இராமகிருட்டிணன்
பணிதிரைப்பட இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
சுருதி
பிள்ளைகள்இரிசிகாந்த், ஆக்னேயா

தொழில்

தொகு

கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்த உடனேயே தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

கேரள கபே என்றப் படத்திற்கு திரைக்கதை எழுதிய இவர், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட "ஐலேண்ட் எக்ஸ்பிரஸ்" என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் “லியோன்” என்ற முக்கிய கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் நடித்திருந்தார். ஒரு வரலாற்று நாடகப் படமான உருமி [1] என்பதை எழுத சங்கரை பிரித்விராஜ் அழைத்தார். சந்தோஷ் சிவன் இயக்கி பிருத்விராஜ் மற்றும் ஜெனெலியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் சங்கரின் கலை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியது.

தேசிய விருது வென்ற வி.கே.பிரகாஷ், இயக்கியிருந்த பாலிவுட் திரைப்படமான "ப்ரீக்கி சக்ரா" என்ற படத்தின் மலையாள பதிப்பை எழுத சங்கரை அழைத்தார். மலையாள பதிப்பு " நெத்தோலி ஒரு செரியா மீனல்லா [2] " என்று தலைப்பிடப்பட்டது. இதில் பகத் பாசிலும், கமலினி முகர்ஜியும் நடித்திருந்தனர்.

குறிப்புகள்

தொகு
  1. "Urumi".
  2. "Natholi review".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_இராமகிருட்டிணன்&oldid=4169212" இலிருந்து மீள்விக்கப்பட்டது